பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 577 இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றார்கள். சிறையில் நோய்வாய்ப் பட்டார்கள். அடுத்து அடுத்து மாண்டார்கள். அவ்விரு தியாகிகளில் இறுதி ஊர்வலத்தில் நானும் நடந்து சென்று அஞ்சலி செலுத்த வாய்த்தது. அவர்கள் பற்றிய இரங்கலைத் தெரிவிக்கும்போது என் கண்கள் அருவிபோல நீரைச் சொரிந்தன. மூன்றாவது இரங்கலில் மூவர் இடம் பெற்றனர். சென்னை இராகவலு, திருவாரூர் குப்புசாமி, அமீது என்பவர்கள் மறைந்து விட்டார்கள். மூவரில் முதல்வர் எனக்குப் பழக்கமானவர்; சென்னையில் இந்தி எதிர்ப்புத் தொண்டர்களுக்குத் திருப்தியாகப் பணியாற்றியவர். செல்வருங்கூட. அவர் இப்போதைய அண்ணா சிலைக்கு அருகில் இயங்கி வந்த கோமள விலாஸ் ஒட்டலுக்குக் காப்பி சாப்பிட வருவார். அங்குதான் அவருடன் பழக்கம். சாதியொழிப்பைப் பற்றி அடிக்கடி பேசுவோம். ஆதிதிரா விடச் சமுதாயத்தைச் சேர்ந்த அவருக்கு, சமுதாயச் சமவெளியை உருவாக்கு வதில் இருந்த ஆர்வம் இயற்கையானது. தன்மான இயக்கத்தில் தொடக்கத்தில் பல்லாண்டுகள் தாழ்த்தப்பட்டவர்கள் தாராளமாகப் பங்கு கொண்டார்கள். அவர்கள் ஒதுங்கி இருக்கவில்லை. அவர்களில் செயல் வீரராகத் திகழ்ந்த இராகவலுவின் மறைவு என்னைத்துக்கத்தில் ஆழ்த்தியது. 85. திருவாரூர் மாநாட்டு முடிவுகள் 1940 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் நான்காம்நாள் திருவாரூரில் பெரியார் ஈ.வெ. ராமசாமியின் தலைமையில் நடந்த நீதிக்கட்சியின் பதினாறாவது மாகாண மாநாட்டில் நிறைவேறிய மூன்று முடிவுகளைப் பற்றி, ஏற்கெனவே குறிப்பிட்டேன். மேற்கொண்டு முப்பது முடிவுகள் நிறைவேறின. அவற்றை எல்லாம் தொடர்ந்து எழுதி, உங்களைத் தொல்லைப் படுத்த மாட்டேன். இருப்பினும் சிலவற்றை உங்கள் நினைவிற்குக் கொண்டுவருவது வரலாற்று உண்மையின் கட்டாயமாகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/620&oldid=787584" இலிருந்து மீள்விக்கப்பட்டது