பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 நினைவு அலைகள் பாட நூலில் துய தமிழ் திருவாரூர் நீதிக்கட்சி மாநாட்டின் இருபத்தைந்தாவது முடிவு: 'இம்மாநாடு, உயர்தரக் கலாசாலைகளில் போதிக்கப்பட்டுவரும், பூகோளம், விஞ்ஞானம், சரிதம் ஆகிய பாடங்களை வடமொழி கலவாத தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக வெளிவரும் பாட புத்தகங்களைக் கொண்டே போதிக்க வேண்டுவதுடன், அதற்கென ஏற்படுத்தப் பட்டிருக்கும் கமிட்டியிலும் பார்ப்பனரல்லாத தமிழ்ப் புலவர்களை நியமிக்க வேண்டுமெனவும் அரசாங்கத்தாரைக் கேட்டுக்கொள்கிறது, ' இது, உண்மையில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைப் பற்றியதாகும். இம்முடிவில், பிறமொழிச் சொற்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்திய தலைமுறையின் பழகு தமிழ். வளரும் தமிழ், கூடியமட்டில் தனித்து இயங்க வேண்டுமென்பது வரும் தலைமுறையின் குறிக் கோளாகும். அதற்கு வழிவிடுவது மேற்படி முடிவாகும். "புரீ’க்குப் பதில் திரு' இன்று 'திரு என்னும் சொல்லை அநேகமாக எல்லோரும் பயன்படுத்தக் காண்கிறோம். என்றுமே அப்படி வழக்கில் இருந்ததா? சென்னை மாகாணத்தில் 1937இல்காங்கிரசு ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு, பற்பல அடைமொழிகளால் பெரியவர்களை அழைத்து வந்தோம். காங்கிரசு ஆட்சி அரசின்அஞ்சல்களில் எல்லோர்க்கும் பூரீ என்னும் சொல்லைப் பயன்படுத்தும்படி ஆணை இட்டது. இதுவும் எதிர்ப்பைக் கிளப்பிற்று. இதைப் பற்றித் திருவாரூர் மாநாட்டின் முடிவு வருமாறு: 'தமிழ் நாட்டு மக்களுக்கு மரியாதை வார்த்தைக்காக பூரீ என்கிற ஆரிய வார்த்தையை வைத்து, தமிழை அலட்சியப்படுத்தி, தமிழர்கள் மனத்தையும் காங்கிரசு ஆட்சியார் புண்படுத்தியிருப்பதால், அதை மாற்றி 'திரு என்கிற வார்த்தையைச் சர்க்கார் உபயோகப்படுத்த வேண்டுமென்று இம்மாநாடு சர்க்காரை வேண்டிக் கொள்கிறது" இதிலும் சில பிறமொழிச்சொற்கள் இருப்பது அன்றைய நடைமுறையின் தன்மையாகும். அரிஜனுக்குப் பதில் ஆதிதிராவிடர் அக்காலத்தில் தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் சமுதாயத்தின் கடைசிப் படிக்கட்டுகளில் இருந்து தவித்த தாழ்த்தப்பட்டோர்க்கு, பெரியாரின் இயக்கமே பெரிய பாதுகாவல். தாழ்த்தப்பட்டோருக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/621&oldid=787585" இலிருந்து மீள்விக்கப்பட்டது