பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 579 அவ்வியக்கம் போராடிய அளவு, வேறு எவ்வியக்கமும் போராட வில்லை. இது மிகையல்ல. எனவே, திருவாரூர் மாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் பற்றி மூன்று முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்று அவர்களை எப்படி அழைப்பது என்பது பற்றியதாகும். 'திராவிட நாட்டு ஆதிதிராவிட மக்கள் 'அரிஜனங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுவதை மாற்றி, 'ஆதிதிராவிடர்கள் என்ற பெயராலேயே அழைக்கப்பட வேண்டுமென்று சர்க்காரையும் பொது மக்களையும் வேண்டிக் கொள்கிறது' என்பதாகும். மற்றோர் முடிவு மாநில, மைய சட்டமன்றங்களுக்கு ஆதிதிரா விடர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை பற்றியது. தனித் தொகுதியை எதிர்த்துக் காந்தி அடிகள் உண்ணாவிரதம் இலண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில், டாக்டர் அம்பேத்காரும் வேறு சில ஒதுக்கப்பட்டோர் தலைவர்களும் பொதுத்தேர்தல்களில் தங்களுக்குத் தனித்தொகுதி முறை வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். s -- அண்ணல் காந்தியார் அதைக் கடுமையாக எதிர்த்தார். தனித்தொகுதி முறை சில ஆயிரம் ஆண்டுகளாக ஆறு கோடி இந்தியர்களை ஒதுக்கி வைத்திருக்கும் கொடுமையை அரசியல் அமைப்புப் படி உறுதிப் படுத்தி விடும்; எல்லா இந்தியர்களும் இணைந்து வாழும் நிலைமை முளைப்பதற்கே வழியில்லாமற் செய்துவிடும் என்பது காந்தியாரின் அசிசிடD. எனவே, தனித் தொகுதி கோரிக்கையை எதிர்த்தார். இருப்பினும் ஆங்கில ஆட்சி, தனித்தொகுதி முறையை ஏற்றுக் கொள்ளும் சூழல் உருவாவதாகக், காந்தியாருக்குப் புலப்பட்டது. அதை எதிர்த்து, காந்தியடிகள், உண்ணாநோன்பினை மேற் கொண்டார். தனித்தொகுதி முறையைக் கைவிட்டு விட்டு, காந்தியாரின் உயிரைக் காப்பாற்றும்படி, டாக்டர் அம்பேத்காருக்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தந்திகள் பறந்தன; செய்தித் தாள்கள் வாயிலாகக் கோரிக்கைகள் குவிந்தன. இந்திய விடுதலை இயக்கத்தின் தலைவராம் காந்தியாரின் இன்னுயிரைக் காப்பாற்றும் பொருட்டு, அண்ணல் அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் உரிமையைப் பாதுகாப்பதை விட்டுக் கொடுத்தார். காந்தியடிகள் உண்ணாநோன்பினைக் கை விட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/622&oldid=787586" இலிருந்து மீள்விக்கப்பட்டது