பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5BO நினைவு அலைகள் அப்போது ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பெயர் பூனா உடன் படிக்கை என்பதாகும். அது தாழ்த்தப்பட்டோருக்குத் தனித் தொகுதிக்குப் பதில் ஒதுக்குத் தொகுதி க்கு வழி செய்தது. வேறுபாடு என்ன? இவ்விரு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? தனித் தொகுதி முறையில், வேட்பாளர் தாழ்த்தப்பட்டோராக இருப்பதோடு, வாக்காளர்கள் அனைவருமே தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பார்கள். ஒதுக்குத் தொகுதியில் வேட்பாளர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் களாக இருப்பார்கள். வாக்காளர்களோ எல்லாச் சாதிகளையும் சமயங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். தனித்தொகுதி முறை கிடைத்திருந்தால், தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதிகள் சாதி இந்துக்களை நாடாமலே, தேர்ந்தெடுக்கப்படும் நிலை இருக்கும். தங்கள் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும் நிலை இருக்கும் போது தங்கள் பிரிவினர்களுக்காக, உறுதியாகவும் உரத்தும் சட்ட மன்றங்களில் குரல் கொடுக்கும் வாய்ப்பும் பெருகும். மாறாக, ஒதுக்குத் தொகுதியில் பிறருடைய வாக்குகளையும் பெற்று வெற்றி பெறவேண்டிய நெருக்கடியில் உள்ள உறுப்பினர்கள், கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளும் தாட்சணிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே, சாதிக் கலவரங்கள் மூண்டு, பழங்குடி மக்கள், அடி உதைபடும்போது, கொலை செய்யப்படும்போது, கற்பழிக்கப்படும் போது, ஒதுக்குத் தொகுதி உறுப்பினர்கள் பெயரளவில், கண்டனங் களை, குறைபாடுகளை வெளிப் படுத்திவிட்டு, வெறும் வாக்குறுதிகளுடன் நிறைவுகொள்ள வேண்டியவர்களாகி விடுவார்கள், என்பது அப்பேத்காரின் மதிப்பீடு. இவ்விரு நிலைகளையும் கருத்தில் கொண்ட திருவாரூர் மாநாடு, 'ஆதிதிராவிடர் சமுதாயத்திற்குச் சர்க்காரால் அளிக்கப்பட்ட தனித்தொகுதி காப்புமுறை, பூனா ஒப்பந்தத்தால் அழிக்கப்பட்டு, அச் சமுதாயத்துக்குச் சரியான பிரதிநிதி வர முடியாமல் செய்யப்பட்டு விட்டதால், இனிவரும் தேர்தல்கள் யாவற்றிற்கும் தனித்தொகுதி முறையையே ஏற்படுத்த வேண்டுமென்று சர்க்காரைக் கேட்டுக் கொள்ளுகிறது என்று கூறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/623&oldid=787587" இலிருந்து மீள்விக்கப்பட்டது