பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 581 காந்தியார் கோட்சேயால் சுட்டுக் கொல்லப்படாமல் இருந்து இருந்தால், அவர் மேலும் பல்லாண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கக் கூடும். அப்போது அவர், தீண்டாமை, அதன் துணைத் தீங்குகள் முதலியவற்றை எதிர்த்துப் போராடி, பெருமளவு முனை மழுங்கச் செய்திருக்கலாம். அவர் மறைந்ததால், அம்பேத்கார் அஞ்சியபடி, ஒதுக்குத் தொகுதி போதிய காப்பாக இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை, ஆதிதிராவிடர் களுக்கும் திராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக இருப்பதால், மக்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி, பதவி ஒதுக்கீடுகளை உயர்த்தும் படியும் ஒர் முடிவு செய்யப்பட்டது. o திருவாரூர் மாநாட்டின்போது, சென்னை மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. மதுவிலக்கு முறையை எல்லா மாவட்டங்களிலும் நடைமுறைப் படுத்தும்படி அம்மாநாடு வற்புறுத்திற்று. அப்போது, நான் கொண்ட மகிழ்ச்சிக்கு மட்டில்லை. கலப்புத் திருமணமே சாதிகள் ஒழிய வழி சாதிமுறை, இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் இருக்கிறது. இந்தக் கொடுமை, பார்ப்பனரல்லாதாரிடையேயும் ஊடுருவியுள்ளது. அதைப்பற்றியும் திருவாரூர் மாநாட்டில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அது என்ன? 'ஆரியச் சூழ்ச்சியாலும் ஆரிய சமய ஆதாரங்களாலும் திராவிட சமூகத்திடை நுழைக்கப்பட்ட சமுதாய உயர்வு தாழ்வு வேற்றுமைகளை வேரோடு களைந்தெறிய வேண்டுமென்றும் திராவிடர்களுக்கு உள்ளாகவே, இன்று காணப்படும் உயர்வு தாழ்வுகளும் நீக்கப்பட வேண்டுமென்றும், இந்த வித்தியாசங்களை ஒழிப்பதற்காகத் தகுந்த வழிகளைக் கையாளத் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் இம்மாநாடு வற்புறுத்துகிறது' என்பதாகும். இதையொட்டிய உரைகளில் கலப்பு மனம் வலியுறுத்தப் பட்டது. கொண்டால், கொடுத்தால் உறவு என்பது பழமொழி. ஆகவே பல சாதிகளுக்கிடையில் கொள்வினை கொடுப்பினை நடக்க வேண்டு மென்று முழங்கப்பட்டது. அது மீண்டும் என் நெஞ்சில் ஆழப்பதிந்தது. கையில் இருக்கும் நோட்டுகள், கள்ள நோட்டுகள் என்று தெரிந்த உடனே, அவற்றைக் கொண்டுபோய் உரிய அதிகாரியிடம் ஒப் படைப்பதே முறை அதைப் புழங்கவிடுவது தவறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/624&oldid=787588" இலிருந்து மீள்விக்கப்பட்டது