பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/626

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 583 திருமணத்தைத் தள்ளிபோடப் போட, என் மேல் எரிச்சல் கொள்வோர் எண்ணிக்கை பெருகும். பள்ளி ஆய்வாளர் பதிவி கிடைக்கும் மட்டும் தள்ளிப் போடுதல் கடல் அலை ஒய்ந்த பிறகு தலை மூழ்கலாம் என்று தள்ளிப் போடுவதற்கு ஒப்பாகக்கூடும். ஆனது ஆகட்டும் என்று முன் முடிவு செய்துள்ளபடி, காந்தம்மாவைக் காலந் தாழ்த்தாது மணஞ் செய்து கொள்வது அறிவுடைமை என்று தோன்றியது. இத்தகைய கருத்துகளோடு திருவாரூரிலிருந்து மதுராந்தகம் வந்தேன். சில நாள்கள் என் திருமணம் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பிறகு, குத்துசி குருசாமியாருக்குக் கடிதம் எழுதினேன். அவருடைய மைத்துனிகாந்தம்மாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் உரியவர்கள் ஒப்புதல் கேட்டு உடனே தெரிவிக்கும் படியும் வேண்டிக்கொண்டேன். 86. பெரியார் ஒப்புதல் பெற்றேன் பெரியாரைக் கண்டேன் நான் தோழர்சா குருசாமிக்கு எழுதிய கடிதத்தில் ஏற்கெனவே நான் காந்தம்மாவின் ஒப்புதலைப்பெற்றதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. நாள்கள் சில நகர்ந்தன. அண்ணன் சா. குருசாமியிடமிருந்து பதில் வந்தது. ஆவலோடு உறையை உடைத்துப் பார்த்தேன். என்ன பதில் வந்தது? 'உங்கள் கடிதத்தை வீட்டில் அனைவரிடமும் காட்டினேன். எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும் என்று தோன்றவில்லை. எனினும் தந்தை பெரியாரைக் கலந்து ஆலோசித்த பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறோம். தந்தை பெரியாருக்கு இது பற்றித் தகவல் கொடுத்திருக்கிறேன். பதில் கிடைத்ததும் எழுதுகிறேன்.' உப்புச் சப்பு இல்லாத பதிலாகத் தோன்றிற்று, காலம் முறைப்படி நகர்ந்தது. சில நாள்களில் மற்றோர் கடிதம் வந்தது. அது என்ன சொல்லிற்று. தந்தை பெரியார் சென்னைக்கு வருகிறார். ஒரு நாள் மட்டுபே தங்குகிறார். அப்போது உங்களைக் கண்டு, பேச விரும்புகிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/626&oldid=787590" இலிருந்து மீள்விக்கப்பட்டது