பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 நினைவு அலைகள் வசதிப்படுமானால், அன்று காலையே, திருவல்லிக்கேணி நெடுஞ் சாலையில் நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு வாருங்கள்' ■ இப்படி எழுதிய சா.குருசாமி, பெரியார் சென்னையில் இருக்கும் நாளைக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட நாளன்று, காலை எட்டு மணிக்கெல்லாம் சிற்றுண்டி அருந்தி விட்டு, திருவல்லிக்கேணி போய்ச் சேர்ந்தேன். பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் குருசாமியின் வீட்டில் இருந்தார். பல தோழர்கள் உடன் இருந்தார்கள். இயக்கப் பணிகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பகல் உணவுக்கு முன்பு, சிறிது நேரம் வெளியில் அலுவல் பற்றிச் சென்று வந்தார். உணவருந்தும் போதும் சில தோழர்கள் இருந்ததால், என் திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவில்லை. மாலைவரை தனிமை கிடைக்கவில்லை. ஈரோட்டு இரயிலுக்குப் புறப்படும் நேரம் நெருங்குகையில், பெரியார் அவர்கள் என்னைப் பார்த்து, 'தம்பி! தனியாகப் பேசவேண்டும் என்று இவ்வளவு தொலைவு வரவழைத்தேன். என்னமோ தாட்சணியம் வந்தவர்களுக்குப் பதில் சொல்லி அனுப்பவதிலேயே பொழுது போய்விட்டது. உங்களுக்கு இடைஞ்சல் இல்லையென்றால், என்னோடு அதே இரயிலில் அரக்கோணம்வரை வரலாமா? நான் தனியாகத்தான் திரும்புகிறேன். வண்டியில் பேசி முடிவு செய்யலாமா?' என்று பெரியார் கேட்டார். பெரியார் அவர்களின் பேச்சுக்கு மறுப்புச் சொல்லவில்லை. அவரோடு இரயில் ஏறினேன். அப்போது மூன்றாம் வகுப்பு என்று ஒன்று உண்டு. புகைவண்டியில் முடிவுசெய்தோம் எவ்வளவு பொருள் வசதி இருந்த போதிலும் பெரியார், மூன்றாம் வகுப்பில்தான் சுற்றுப் பயணம் செய்வார். ஒரு முறை நண்பர் ஒருவர், 'அய்யா இப்படிப் போகலாமா? குறைந்தது இரண்டாம் வகுப்பிலாவது போகலாமே ' என்று கெஞ்சினார். நான்காம் வகுப்பு இல்லாததால், மூன்றாம் வகுப்பில் போகிறேன். சராசரி மனிதன் அனுபவிப்பதைவிட அதிகம் அனுபவிப்பது சரியல்ல' என்று பெரியார் பதில் சொன்னார். அத்தகைய பெரியாரோடு நான் சென்னை மையப் புகைவண்டி நிலையத்திலிருந்து, அரக்கோணம் சந்திப்புவரை பணம் செய்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/627&oldid=787591" இலிருந்து மீள்விக்கப்பட்டது