பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 நினைவு அலைகள் 'அப்ப, அவர்களுக்குத் தெரிவிக்காமல் ஏற்பாடு செய்துவிடலா மென்று நினைக்கிறீர்கள்? இப்படிப் பெரியார் அவர்கள் கேட்டார். 'ஆம்! காதும் காதும் வைத்ததுபோல் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். திருமணத்தைப் பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்ளலாமென்று நினைக்கிறேன்' என்றேன். 'அந்த யோசனை தவறானது அல்ல. ஆனாலும், குஞ்சிதம் திருமணத்தைப் போல் காந்தம் திருமணத்தையும் சிறப்பாகச் செய்து வைத்தால் நம் கொள்கை பரவ வாய்ப்பாகும். 'அக்காவின் திருமணத்திற்குச் செலவு செய்ததுபோல தங்கையின் திருமணத்திற்கும் குறைந்தது ஈராயிரம் ரூபாய்களாவது, நானே செலவு செய்து திருமணத்தைச் சிறப்பாகச் செய்து வைக்கிறேன். அதற்கு ஒப்புக்கொள்ளலாம் அல்லவா!' என்றார் பெரியார். 'அய்யா! தங்களுக்குக் குறுக்கே சொல்லுகிறேன் என்று தயவு செய்து நினைக்க வேண்டாம்! 'பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு குஞ்சிதம் குருசாமி திருமணமே, இயக்கத்தின் சார்பில் நடந்த முதல் கலப்புத் திருமணம்: புரோகிதமற்ற திருமணம். 'அன்றைக்கு ஒரளவு விளம்பரம் சரிதான். அதற்காகத் தாங்கள் இரண்டாயிரம் ரூபாய்கள் செலவு செய்ததும் பொருத்தமாக இருக்கலாம். 'அதற்குப் பிறகு எண்ணற்ற கலப்புத் திருமணங்களும் புரோகித ஒழிப்புத் திருமணங்களும் நடந்துவிட்டன. 'என் பிரிவைச் சார்ந்தவர்கள் பன்னிரண்டு பேர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். 'சீர்திருத்தத் திருமணம் சிக்கனத் திருமணமாகவும் இருக்க வேண்டும் என்று அய்யா அடிக்கடி சொல்லுவிர்களே! அதை நடைமுறைப்படுத்த எனக்கு நல்ல வாய்ப்புக் கிட்டியிருக்கிறதே! இதை நழுவ விடலாங்களா!' என்று பணிவுடன் வினவினேன். 'நீங்கள் சொல்கிறது புரிகிறது. வெறும் பதிவுத் திருமணமாக முடிக்க விரும்புகிறீர்கள். நண்பர்களுக்காவது அழைப்புக் கொடுக்க வேண்டாமா? எவ்வளவு பேருக்கு அழைப்பு அனுப்ப எண்ணம்?" என்று பெரியார் கேட்டார். 'அழைப்பு அச்சடிப்பதாகவோ, அனுப்புவதாகவோ இல்லை. ஒரு நாளைக்குமுன் அய்ந்தாறு அன்பர்களை நேரில் அழைப்பேன். அதற்குக் காரணங்கள் இரண்டு. 'ஒன்று, அழைப்புப் போனால், பல உறவினர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு தொல்லை கொடுப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/629&oldid=787593" இலிருந்து மீள்விக்கப்பட்டது