பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 நினைவு அலைகள் 'தனித் திருமணச் சட்டத்தின்படி எங்கள் இருவருடைய திருமணங் களையும் பதிவு செய்வதற்குமேல் ஒன்றும் செய்ய வற்புறுத்தாதீர்கள், அய்யா!. 'அவ்வேளை, தாங்கள் தயவுசெய்து உடன் இருக்க வேண்டும். தங்களுக்கு வசதியான நாளைச் சொல்லுங்கள்; அன்று பதிவு: செய்து விடலாம்.' நாள் கிழமை பார்க்கப் போவது இல்லை, மகிழ்ச்சி' என்று சொல்லிக்கொண்டே தம்முடைய சொக்காய்ப் பையில் இருந்த நாள்குறிப்பை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். "சட்டப்படி, பதிவுத் திருமணத்திற்கு ஒரு திங்கள் முன்னறிவிப்பு வேண்டும். நான் இன்னின்ன நாள்களில் சென்னைக்கு வர இயலும். அந்நாள்களில் ஒரு நாளை முடிவு செய்துகொண்டு, தகவல் கொடுங்கள். நான் வந்து விடுகிறேன். கடைசியாக ஒன்று, 'பெண்ணுக்கு என்ன நகை போடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேள்வியில் முடித்தார் பெரியார் அவர்கள். 'அய்யா நான் என்னைக் கொடுப்பது போதாதா? எந்தவிதச் சிறிய நகையும் போட ஒப்பமாட்டேன். பெண் வீட்டாரிடமிருந்தும் நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. புது வேட்டி, புதுச்சேலை முதலி யனவும் தேவையில்லை' என்று அழுத்தமாகக் கூறினேன். பெரியார் என்னைப் பொறுத்தருளினார். "சரி; உங்கள் விரும்பம்; பெண் வீட்டாரோடு கலந்து கொண்டு, நான் குறிப்பிட்ட நாள்களில் ஒன்றில் திருமணத்தைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்துவிடுங்கள். அதற்கு உரிய முன் அறிவிப்பைப் பதிவாளருக்குக் கொடுத்து விடுங்கள்' என்று பெரியார் கூறினார். சிறிது போதில் அரக்கோணம் வந்துவிட்டது. புகைவண்டி நின்றது. தந்தை பெரியார் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு போய் செங்கற்பட்டுக்குப் போகும் வண்டிக்காகக் காத்திருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/631&oldid=787597" இலிருந்து மீள்விக்கப்பட்டது