பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 நினைவு அலைகள் அவ்வேளை, அந்நோன்பு எனக்கும் என்பது புலப்பட்டது. பிற்கால வாழ்க்கையில், எத்தனையோ நோன்புகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கும்; அவற்றிற்கு இது ஒத்திகை என்பது மட்டும் அப்போது தெரியாது. கல்லூரி முதல்வர் விதித்த கட்டுப்பாட்டைக் கண்டு மிரளவில்லை. ஏற்கெனவே முடிவு செய்த படி, திருணமத்தைப் பதிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தோம். அடுத்த நாள், கடற்கரைப் புகை வண்டி நிலையத்திற்கு அருகிலுள்ள திருமணப் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றோம். 'தனித் திருமணச் சட்டம் ' என்று ஒன்று உண்டு. அதன்படி திருமணத்தைப் பதிவு செய்து கொள்வோர், வெவ்வேறு சமயங்களை, சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; சமய நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கலாம். அச்சட்டத்தை யொட்டி, முன் அறிவிப்புக் கொடுத்து விட்டு வந்தோம். வீட்டில் பேசிக் கொண்டிருக்கையில், எனக்கு எத்தகைய உடை எடுக்கலாம் என்று கேள்வி பிறந்தது. நான் பட்டு அணிவதில்லை; சரிகைக் கரை வேட்டி கட்டு வதில்லை; கைத்தறி ஆடையே அணிவது வழக்கம். இருப்பினும் திருமணத்தையொட்டி எனக்குப் புத்தாடை எடுக்க வேண்டாம். உங்கள் பெண்ணுக்கு ஏதாகிலும் எடுத்துக் கொடுப்பதில் நான் குறுக்கே நிற்மாட்டேன்' என்று பதில் கூறினேன். 'வாழ்வில் ஒரு நாளாகிய திருமண நாளின் நினைவாக, எனக்கு ஒரு நல்ல சூட் தைத்துக் கொடுக்க விரும்பினார்கள். அதற்கு இசைய வைத்து விட்டார், குத்துசி குருசாமியார். திருமண முன்னறிவிப்பைக் கொடுத்த பிறகு, நான் என் வேலையைப் பார்க்க மதுராந்தகத்திற்குத் திரும்பி விட்டேன். என் ஏற்பாடு, கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. எவரிடமும் என் திருமணத்தைப்பற்றிச் சொல்லவில்லை. அரசு ஆணை வந்தது அப்படிச் சில நாள்கள் ஓடின. எதிர்ப்பார்த்து எதிர்பார்த்து, கடைசியில் மறக்கவும் முயன்ற வேளையில் அரசு ஆணை ஒன்று வந்தது. என்னை, செங்கற்பட்டு மாவட்டம் பொன்னேரி வட்டாரத்தின் கல்வித் துறை இளந்துணை ஆய்வாளராக, நியமித்த ஆணை அதுவாகும். - அது நிலையான இடமல்ல. அங்கிருந்தவர் விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட தற்காலிகப் பணியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/635&oldid=787601" இலிருந்து மீள்விக்கப்பட்டது