பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 593 இருப்பினும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. கல்வித்தொண்டு, அதிலும் நாட்டுப்புறங்களில் கல்வித் தொண்டு செய்யக் கிடைத்த அவ்வாய்ப்பினைப் பெரிதாக மதித்தேன். இருந்த வேலையிலிருந்து சம்பளமில்லாத விடுப்புப் பெற்றுக்கொண்டு, புதிய அலுவலில் சேர முடிவு செய்தேன். அதற்கு அனுமதி கோரி, மாவட்ட ஆட்சிக்குழுவிற்கு விண்ணப் பித்தேன். அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று வேண்டினேன். என்னை உதவி ஊராட்சி அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பதில் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. உரிய ஆணையைத் தந்தார்கள். என் இடத்தில் என் கல்லூரி நாள்கள் தொட்டு எனக்கு நெருங்கிய நண்பராக விளங்கும் திரு.டி.எம். கண்ணபிரானை நியமித்தார்கள். அது எனக்கு மிகவும் உதவியாயிற்று. நான் குறிப்பிட்ட நாளில், அவர் என்னிடம் பணியை ஏற்றுக் கொண்டார். குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, அலுவலைப் பெற்றுக் கொண்டார். இதற்கிடையில், நான் அலுவலக ஏடுகள், அறிக்கைகள் ஆகிய வற்றைக் கடைசி நாள்வரை எழுதி முடித்தேன். அவற்றைப் பாதுகாப்பாக ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினேன். வீட்டையும் பெட்டியையும் என்கடைநிலை ஊழியர் திரு.மேகவர்ணத் திடம் ஒப்படைத்தேன். அவருக்கும் என் திருமண ஏற்பாடு தெரியாது. மாப்பிள்ளை அழைப்பு மதுராந்தகம் பகுதியில் ஒருவருக்கு மட்டும் காதும் காதும் வைத்தாற் போல் அச்செய்தியை முன்னரே அறிவித்தேன். அவர் எவர்? பொலம்பாக்கம் முத்துமல்லா ஆவார். அவருக்கு முழு விவரத்தையும் சொன்னேன். அவர் திருமணத்தன்று என் மாமனார் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். திருமணத்திற்கு முன் நாள் பிற்பகல் இரயில் ஏறி, மாலைப் பொழுது சென்னையை அடைந்தேன். எழும் பூர் புகைவண்டி நிலையத்தில் தோழர்கள் குத்துளசி குருசாமியார், பூவாளுர் பொன்னம்பலனார் ஆகிய இருவரும் வந்து என்னை அழைத்துக்கொண்டு போனார்கள். அதோடு முடிந்தது என்னுடைய 'மாப்பிள்ளை அழைப்பு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/636&oldid=787602" இலிருந்து மீள்விக்கப்பட்டது