பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 595 அப்போது அமைக்கப்பட்ட நாத்திகக் கழகத்தில் துணைத்தலைவராக இருந்து செயல்பட்டார். பெரியாரின் பெரியாராகிய ஈ.வெ.கி. தன்மான இயக்கத்திற்கும் சமதர்ம இயக்கத்திற்கும் பகுத்தறிவு வளர்ச்சிக்கும் போற்றத்தக்க தொண்டாற்றினார். சமதர்மக் கருத்துகளைப் பரப்பியதற்காக, ஈ.வெ. கிருஷ்ணசாமியும் சிறைப்பட்டார். தம்பியின் வழியைப் பின்பற்றி அல்லல் பட் பெருமகனார், ஈ.வெ.கி. ஆவார். திருமணத்திற்கு வந்தோர் தன்மான இயக்கத்தின் செயல் வீரர்களில் இருவராக விளங்கியவர் கள் மாயூரம் எஸ்.வி. லிங்கமும் பூவாளுர் அ. பொன்னம்பலனாரும். அவர்கள் என் மாமனார் திருவாரூர் சுப்பிரமணியத்திற்கு மிகவும் வேண்டியவர்கள். அவர்கள் முன்னாளே வந்து சேர்ந்தார்கள். பெண் வீட்டார் சார்பில் இன்னும் எவர் வந்தார்? காந்தம்மாவின் தாய்மாமன் திரு சண்முகந்தரம், தஞ்சை மாவட்டம் திருக்கறுகாவூரில் இருந்து வந்தார். கல்லூரித் தோழியர் சிலர் வந்தனர். சென்னையிலே தங்கியிருந்த உறவினர்களாகிய திருவாளர்கள் தி. இரா. பூரீதரன், தி.இரா. முரளிதரன் அவர்களுடைய பாட்டானர் திரு. கோபாலகிருஷ்ணபிள்ளை ஆகியோர் வந்தனர். தந்தை பெரியார் வந்தது தமிழ் நாடே வந்திருப்பது போன்ற மகிழ்ச்சியை ஊட்டியது. என் சார்பிலும் சிலர் வருகை புரிந்தார்கள். ஏற்கெனவே கூறியது போல் பொலம்பாக்கம் முத்துமல்லா வந்தார். என்னிடம் மதுராந்தகம் கோட்டதுணைப் பஞ்சாயத்து அலுவலர் பதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டிய திரு டி.எம். கண்ணபிரான் வந்தார். மீஞ்சூர் திரு. பக்தவத்சலம், சர். பி.டி. ராசன், திரு.ஒ.வி. அளகேசன் ஆகியோரின் மைத்துனரும் எனக்கு நெருங்கிய நண்பருமான திரு. தி. கோ. சீனிவாசன் வந்தார். திரு. பா. ச. கைலாசமும் வந் திருந்து மகிழ்வூட்டினார். என் உறவினர் எவராவது வந்தார்களா? ஆம் வந்தார்கள். அப்போது என் மூத்த தம்பி சிவானந்தம் சென்னையில் ஒரு மளிகைக்கடையில் வேலை பார்த்து வந்தான். அடுத்த இரு தம்பிகளாகிய நடராசன், திருநாவுக்கரசு ஆகியோர் முறையே கிண்டி பொறியியல் கல்லூரியிலும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் மாணவர்களாக இருந்தார்கள். நேரில் அழைத்ததின் பேரில் அவர்கள் வநதனா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/638&oldid=787605" இலிருந்து மீள்விக்கப்பட்டது