பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 நினைவு அலைகள் திருமணம் நடந்தது 25-10-1940 வெள்ளிக் கிழமையன்று காலை 10 மணி அளவில் சென்னை மாவட்டப் பதிவாளர் அலுவலத்திற்குப் புறப்பட்டோம். அந்நாளில் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே பதிவு செய்து கொள்ள முடியும். எங்களோடு குஞ்சிதம், குருசாமி, ஈ.வெ. கிருஷ்ணசாமி, பெரியார், பொன்னம்பலனார், லிங்கம் மற்றும் சிலர் புறப்பட்டார்கள். கார் ஏறும் வேளை பெத்து நாயக்கன் பேட்டைத் தோழர்கள் சிலர் வந்து சேர்ந்தார்கள். பெரியார், பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தால் சமாளிக்க முடியாத கூட்டம் கூடிவிடும் என்று தடுக்க முயன்றார்கள். பெரியார் முதலில் ஒப்பவில்லை. தங்கள் விருப்பம்' என்றேன். சில மணித்துளிகள் உரையாடிய பிறகு பெரியார் வீட்டிலேயே காத்திருக்க உடன்பட்டார்; நாங்கள் சென்றோம். அறிஞர் அண்ணாதமிழக முதல் அமைச்சரான சில திங்களுக்குள் சுய மரியாதைத் திருமணச் செல்லும்படிச் சட்டத்தை நிறைவேற்றினார். இப்போது எல்லா நிலைப் பதிவாளர் அலுவலகத்திலும் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். அன்று மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் உரிய பதிவேடுகளில் காந்தம்மாவும் நானும் கையெழுத்திட்டு எங்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொண்டோம். திரு. ஈ. வெ. கிருஷ்ணசாமி சாட்சிக் கையெழுத்திட்டவர்களில் ஒருவர். பதிவுப்பணி முடிந்ததும் அனைவரும் வீடு திரும்பினோம். வழியில் அன்று பூந்தமல்லி நெஞ்சாலை என்று அழைக்கப்பட்ட இன்று பெரியார் ஈ.வெ.ரா. நெஞ்சாலை என்று அழைக்கப்படும் சாலையில் உள்ள தாஸ் சகோதரர்கள் என்னும் புகைப்பட நிலயைத்திற்குச் சென்றோம். திருமணநாளன்று மணமக்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புவது இயற்கைதானே! தாஸ் பழைய காலத்துப் புகைப்படக்காரர். பற்பல கோணங்களில் இருந்து நோட்டம் பார்த்து, பின்னர் படம் எடுத்தார். அதற்கு இருபது மணித்துளிகள் போல் செலவாகிவிட்டது. இதனால் காந்தம்மாவும் நானும் திருவல்லிக்கேணி நெடுங் சாலையில் இருந்த மாமனார் வீட்டிற்குத் திரும்பக் காலதாமதம் ஆயிற்று. நாங்கள் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததும் பெரியார் எங்களை நோக்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/639&oldid=787606" இலிருந்து மீள்விக்கப்பட்டது