பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 597 புதுப் பெண்ணும் மாப்பிள்ளையும் எங்கே இவ்வளவு நேரம் தலைமறைவாகப் போய்விட்டீர்களென்று கிண்டலாகக் கேட்டார். 'புகைப்படம் எடுத்துக் கொள்ள' என்றேன். 'அதற்கா? இவ்வளவு நேரம் இப்போது நொடியில் படம் பிடித்துக் கையிலேயே கொடுத்து விடுகிறார்களே படத்திற்கு எவ்வளவு கட்டணம்' என்றார். மூன்று ரூபாய்கள் என்றேன். பெரியார் நொடிப்பொழுதில், வெகுண்டார். 'என்னங்க! பணக்கொழுப்பு! மெளண்ட் ரோடில் ரூபாய்க்கு மூன்று படம் கிடைக்கும். நீங்கள் ஒரு படத்திற்கு மூன்று ரூபாய் என்று ஏற்பாடு செய்து கொண்டா வருவது? அநியாயம்; பணத்தை இப்படியா இறைப்பது?' என்று அனல் கக்கப் பேசினார். என் அதிர்ச்சியை எப்படிச் சொல்ல பெரியாரை முதன் முறை கண்டபோது நாலானவிற்கு ஆப்பிள் வாங்கிக் கொடுத்ததற்காக வெகுண்டு இடித்து உரைத்தார். இப்போது மூன்று ரூபாய் செலவிற்காக இப்படிக் கோபிக்கிறாரே என்று கலக்கங்கொண்டேன். பூவாளுர் பொன்னம்பலனார் குறுக்கிட்டுத்தடுத்து ஆட்கொண்டார். 'என்ன அய்யா! தாங்கள் இத்திருமணத்திற்காக ஈராயிரம் ரூபாய் செலவு செய்ய முன் வந்தீர்கள். மாப்பிள்ளை, அச்செலவை மிச்சப்படுத்தி விட்டார். இந்த மூன்று ரூபாய் போனால் போகட்டும்' என்று உரைத்தார். அது பெரியாரின் சினத்தைத் தணித்தது. குடிஅரசில் திருமணச் செய்தி எங்கள் திருமணப் பாராட்டுக் கூட்டச் செய்தி 3-10-40 நாளிட்ட குடி அரசில் வெளியாயிற்று. எங்கள் திருமணப் புகைப்படத்தை வெளியிட்டு, கீழே 15-10-40ஆம் தேதி ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்ட தோழர்கள் நெ.து. சுந்தரவடிவேல் எம்.ஏ., எல். டி., அவர்களும் டி.எஸ். காந்தம் BSc (Hons) Msc. அவர்களும் ' என்று எழுதி, செய்தியையும் வெளி யிட்டிருந்தது. காந்தம் - சுந்தரவடிவு திருமணம் பாராட்டுக் கூட்டம் பெரியார் தலைமையில் நடைபெற்றது சென்னை கோகலே ஹாலில் 27-10-40 மாலை 5.30 மணிக்குத் தோழர்கள் சுந்தரவடிவேல்-காந்தம் ஆகியவர்களின் ரிஜிஸ்டர் திருமணப் பாராட்டுக்கூட்டம் நீதிக்கட்சித் தலைவர் தமிழ் நாட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/640&oldid=787608" இலிருந்து மீள்விக்கப்பட்டது