பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 599 அவர்களுக்கும் திருமணம் சென்னையில் பதிவுத் திருமணமாக 25-10-40 ஆம் தேதி நடந்தது என்ற செய்தியும் அத்திருமணத்தைப் பாராட்ட 27-10-40ஆம் தேதி மாலை சென்னை கோகலே மண்டபத்தில் பெரியார் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் கூட்டப்பட்டதென்றும் பல பிரபல தலைவர்கள் மணமக்களைப் பாராட்டி வாழ்த்தினார்கள் என்ற செய்தியும் வேறு பக்கத்தில் வருவதைக் காணலாம். மாப்பிள்ளை தொண்டைமண்டல வேளாள சைவ வகுப்பைச் சேர்ந்தவர். பெண் சாதாரண வேளாள அசைவ வகுப்பைச் சேர்ந்தவர்; இருவரும் கல்வியில் கல்லூரிப் பட்டம் பெற்றவர்கள். இத்தகையர்வளுடைய வாழ்க்கை ஒப்பந்தம் திராவிட சமூகத்திற்கு மலையின் மீதிட்ட விளக்குப்போல் விளங்கும் என்றே கருதுகின்றோம். இத் திருமணத்தில் சாதாணரமாகச் சீர்திருத்தம் திருமணம் என்று சொல்லிக் கொண்டு செய்யப்படும் திருமணங்களில் நடப்பதுபோன்ற தாலி கட்டுதல், மாலை மாற்றுதல் கூட நடைபெறவில்லை என்பதிலிருந்து இது எவ்வளவு சிக்கனமாகவும், சீர் திருத்தமாகவும் நடைபெற்றிருக்கிறதென்பதை வாசர்கள் கவனிக்க வேண்டியதாகும். இத்திருமணம் ஒரு ஜாதிக் கலப்புமணம். ஒரு தொண்டமண்டல வேளாள சைவ வகுப்பைச் சேர்ந்தவர், சாதாரண வேளாள அசைவ வகுப்பைச் சார்ந்த பெண்ணைத் தமது வாழக்கைத் துணைவியாகச் சேர்த்துக் கொண்டடிருக்கிறார். இத்தகைய ஜாதி கலப்பு மணங்களும் பல கடந்த 20, 30 வருடங்களாக நடந்து வருகின்றன வென்றாலும், பிரஸ்தாப ஜாதிக் கலப்புத் திருமணத்தைப் போன்று இரண்டு அல்லது மூன்று திருமணங்கள்தான் நடைபெற்றிருக்கின்றன. எனவே, மற்ற வகுப்புகளைவிடத் தொண்டமண்டல சைவ வேளாள வகுப்பு மட்டிலும் எவ்வளவு வேகமாக ஆமைபோல் சீர்திருத்தப் பாதையில் நகர்ந்து வருகிற தென்பதை மட்டிலும் இது சமயம் எண்ணிப் பார்க்கக் கோருகிறோம். இம்மாதிரி ஜாதி விட்டு ஜாதி மட்டும் கலப்புத் திருமணம் செய்து கொண்டால் போதாது, உண்மையிலேயே திராவிட சமூகம் ஒரு வர்க்கமாக (நேஷனாக) விளங்க வேண்டுமானால் திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எம்மதத்தைப் பின்பற்றுபவர்களானாலும் கலப்புமணம் செய்து கொள்ளும் பழக்கம் தோன்ற வேண்டும். இது ஒன்றும் இந்நாட்டுக்குப் புதிய வழக்கம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. பண்டைத் தமிழகத்தில், இத்தகைய திருமணங்கள், அதாவது, ஒரு மதத்திலுள்ளவர் மற்றொரு மதத்திலுள்ளவருடன் வாழ்க்கை ஒப்பந்தம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தி வந்ததைப் பழந்தமிழ் நூல்களிலிருப் பதை யாவரும் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/642&oldid=787610" இலிருந்து மீள்விக்கப்பட்டது