பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GOC) நினைவு அலைகள் திராவிட நாட்டைச் சேர்ந்த ஒரு பிரிவு என்று சொல்லப்படும் இலங்கையில் உள்ள இலங்கை வாசிகளான சிங்களவர்களில் ஒரு மதத்தினர் மற்றொரு மதத்திலுள்ளவர்களைத் திருமணம் செய்து வருவதை இன்றும் காணலாம். ஆகவேதான் இன்று சிங்களவர்கள் ஒரே வர்க்கமாகக் காணப்படுகின்றனர். அதற்கறிகுறியான குணங்களும் அவர்களிடத்தில் தென்படுகின்றன. இந்நாட்டிலும் இத்தகைய எண்ணற்ற திருமணங்கள் நடை பெறக்கூடும். ஆனால் அதற்குத் தடையாக இருப்பவை என்ன என்று எண்ணிப்பார்ப்பவர்களுக்கு மதக்கட்டுப்பாடும், ஜாதிக் கட்டுப்பாடும், சட்டக்கட்டுப்பாடும் என்பவைகளேயாகும். மக்களுக்கு ஏற்பட்ட பகுத்தறிவின் காரணமாகவும், சுயமரியாதை இயக்கப் பிரச்சாரத்தின் காரணமாகவும், பெரியாரின் அருமுயற்சியின் காரணமாகவும் மக்கள் மனத்தில் உள்ள மதக்கட்டுப்பாடும் ஜாதிக் கட்டுப்பாடும் சிறிது சிறிதாகத் தகர்த்து ஏறியப்பட்டு வருகிறது. ஆனாலும் சட்டக்கட்டுப்பாடு தகர்க்கப்படுவதற்குச் சட்டத்தினால்தான் ஆகும். கலப்புமணம் செய்து கொள்பவர்களுக்குச் சொத்துரிமை பாத்தியதை இருக்காது என்ற அச்சம் நம் மக்கள் மனத்திலிருந்து வந்தது. இப்பொழுது அந்த அச்சத்திற்கு அவ்வளவு இடமில்லை என்றே கருதவேண்டி இருக்கிற்து. ஏன், அவ்வாறு சொல்லுகிறோம் என்றால், டிெ திருமணத்தை முன்னிட்டு 27-10-40 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசுகையில், 'கலப்பு மணம் செய்து கொண்டால் சொத்து இல்லையென்றும், சட்டப்படி செல்லாது என்றும் சொல்லுவதுகூடச் சரியல்ல. பார்ப்பனப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டாலோ அல்லது பார்ப்பன ஆனைக் கல்யாணம் செய்துகொண்டாலோ மாத்திரம்தான் அது செல்லாதாம். அதைத் தவிர மற்றப்படி பார்ப்பனரல்லாதார் இந்துக்கள் தங்களுக்குள் எந்த ஜாதியில், யாரை மணம் செய்து கொண்டாலும் அது செல்லுபடியாகும். ஆதலால் அதைப் பற்றிய சந்தேகம் யாருக்கும் வேண்டாம்" எனக் குறிப்பிட்டிருப்பதினாலேயாகும். திராவிடர்கள் இந்துக்கள் எனச் சொல்லிக்கொள்ளக் கூடாது எனத் திருவாரூரில் நடைபெற்ற 15 ஆவது ஜஸ்டிஸ் மாநாட்டில் தீர்மானம் செய்திருப்பதால் பார்ப்பனரல்லாதார் இந்துக்கள் தங்களுக்குள் எந்த ஜாதியில் யாரை மணம் செய்து கொண்டாலும் என்றிருப்பதை 'பார்ப்பனரல்லாதார்', 'திராவிடர்கள் தங்களுக்குள் எந்த மதத்தில் யாரை மணம் செய்துகொண்டாலும் எனச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதே நமது அவா. அவ்வாறு சட்டம் திருத்தப்பட்டால்தான் திராவிட சமூகம் - திராவிட வர்க்கம் ஒரு நேஷனாக விளங்க முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/643&oldid=787611" இலிருந்து மீள்விக்கப்பட்டது