பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு Յ03 பொன்னேரி வட்ட நிலப்படத்தை வைத்துக் கொண்டு, எங்கே தொடங்கலாம்; எப்படித் தொடரலாம்' என்று ஆலோசனைகள் கூறினார். அலுவலகத்திற்குத் திரும்பாமல் தொடர்ந்து சில நாள்கள் பயணம் செய்வதற்கு வழிகளைச் சொன்னார். அதில் உள்ள சிக்கல் என்ன? இரவு நேரத்தில் எந்தப் பள்ளியில் தங்குவது என்பதே சிக்கல். பல பள்ளிகள் கூரைகள் பழுதாயிருக்கும். மழைக் காலத்தில் அவற்றுள் உறங்க முடியாது. அதோடு, அப்பகுதியில், பல ஊர்களில், உணவுக் கடைகள் ஆசிரியர்கள் பலர் வெளியூர்களில் இருந்து பள்ளிக்கு வந்து போவார்கள். இவற்றைச் சமாளிக்க வழி சொன்னார். 'வீடு கிடைக்கும்வரை அலுவலகத்திலேயே தங்கியிருக்கலாம் என்று யோசனை கூறினார். அதற்கு மேலிடத்து இசைவு தேவை. அதற்காகச் சிறுதொகை குடிக்கூலி கொடுத்தால் போதும். ஏதுமறியாத என்னை அவர் ஆற்றுப்படுத்தினார். என்னுடைய மனுவைப் பெற்று அதை ஆதரித்துப் பரிந்துரைத்தார். சில நாள்கள் அலுவலகத்தில் ஒரு பகுதியில் தங்கயிருந்தேன். பின்னர் ஊருக்குள் ஒர் அறைக்கு மாறினேன். உணவுச்சாலை உணவு, மோசமாக இருந்தது. திருப்பெரும்பூதூரில் என்னோடு நெருங்கிப் பழகிய திரு மரியண்ணா அப்போது பொன்னேரி உயர்நிலைப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். அவர் வீட்டில் உணவிட்டுக் காப்பாற்றினார். வேலையில் சேர்ந்த அன்று மாலையே, ஆய்வாளரின் ஒப்புதலோடு புகை வண்டியேறி, சென்னை திரும்பினேன். அடுத்த நாள் என் திருமணத்தைப் பாராட்டும் கோகலே மண்டபக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அரசு ஊழியர்க்கு அரசியல் எதற்கு? திங்கட் கிழமை பொன்னேரிக்குத் திரும்பியதும் ஒரு பள்ளித் தணிக்கைக்குச் சென்றேன். முன்கூட்டியே திட்டமிட்டபடி அன்றிரவு அலுவலத்திலேயே தங்கியிருந்தேன். ஆய்வாளர் சுந்தரம் அய்யரும் மேலிடத்து ஒப்புதலோடு அலுவலகத்திலேயே குடியிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/646&oldid=787614" இலிருந்து மீள்விக்கப்பட்டது