பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 நினைவு அலைகள் இரவு உணவுக்குப் பிறகு இருவரும் தாழ்வாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஆய்வாளரின் குடும்பமும் திருவல்லிக்கேணியில் இருந்தது. அவரது மனைவியார், என் திருமணம் பற்றிக் கேள்விப்பட்டு அதைப்பற்றி அவருக்குத் தகவல் கொடுத்து விட்டார். ஆய்வாளர் மெல்லப் பேச்சைத் தொடங்கினார். ஒளிப்பதற்கு என்ன இருக்கிறது? நடத்ததைச் சொன்னேன். ராஜாஜி குடும்பத்தில் நடந்த கலப்புத் திருமணத்தைக் குறிப் பிட்டார். அதில் குற்றம் ஏதும் இல்லை என்று முடிவு சொன்னார். சிறிது நேரம் ஏதேதோ பேசினார். பிறகு என்னை ஆழம் பார்க்க முயன்றார். 'நீங்கள், சத்தியமூர்த்தி பேச்சையும் ஆற்காடு இராமசாமி முதலியார் பேச்சையும் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். 'நான் இருவர் பேச்சுகளையும் பலமுறை கேட்டிருக்கிறேன். என் மதிப்பீட்டில் இருவரில் முதலியாரே நாவன்மை படைத்தவர். சத்தியமூர்த்தி நாட்டுரிமை பற்றிப் பேசுவதால் எளிதில் ஒளிவிடுகிறார். 'ஏன்? நான் சொல்வது சரிதானே!' என்று, ஆய்வாளர் சுந்தரம் அய்யர் கேட்டார். நொடியில் விழித்துக் கொண்டேன். "அய்யா நீங்களும் நானும் அரசுக்கு ஊழியம் செய்து வாழ வந்துள்ளோம். நமக்கு எதற்கு அரசியல் வழக்கு? 'அலுவலகத்தில் அரசியல் பேசுவது நல்லதல்ல. நம் வீடுகளில் தங்கியிருக்கும்போதுமட்டும்.அரசியல்பேசுவோம் அதுவும், நம்மால் வழி நடத்தப் படவேண்டிய ஆசிரியர்களிடம் பேசுவது எனக்கு உடன்பாடல்ல. 'தயவுசெய்து, இனி என்னிடம் அரசியல் பொதுவாழ்க்கைப் புள்ளிகளைப் பற்றிக் கேள்வி கேட்காதீர்கள் இப்படிச் சொன்னேன். என் சொல்லில் சூடு இல்லை; ஆனால் உறுதி இருந்தது. ஆய்வாளர் என்மேல் சினங்கொள்ளவில்லை; மாறாகப் பாராட்டினார். அப்புறம் அரசியல் பேச்சே எடுத்ததில்லை. ஆயினும் எதற்காகவும் முகம் சுளிக்கவில்லை. என் தணிக்கை, பார்வையிடுதல் பணியில் முழு மூச்சாக இறங்கினேன். பசி நோக்காது நெடுநடை பாராது அதைச் செய்து வந்தேன். நவம்பர்த் திங்கள் பொன்னேரி மாவட்ட உயர்நிலைப் பள்ளிகளின் ஆண்டுத் தணிக்கைக்காக, மாவட்டக் கல்வி அலவலர் சைவப்பழம் திரு. சச்சிதானந்தம்பிள்ளை பொன்னேரிக்கு வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/647&oldid=787615" இலிருந்து மீள்விக்கப்பட்டது