பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 611 மாட்டுத் தொழுவங்களோடு போட்டிபோட்ட பள்ளிக் கட்டடங்கள் ёТЛТТGTTLD. மண் தரை மேல், விரிப்புகள்கூட இல்லாது மாணவர்கள் குப்பை கூளங்கள் நிறைந்த மண்தரையில் உட்கார வேண்டிய நிலையில் இருந்த பள்ளிகள் எண்ணற்றன. ஒட்டடையும், அழுக்கும் சொத்தாகக் கொண்ட பள்ளிகள் பற்பல. பொங்கலுக்கு முன்பு, குடிசைகளைக் கூடச் செப்பனிட முயலு வதைப் போன்று ஆண்டுத் தணிக்கை அறிவிப்பு வந்ததும், தனியார் நிர்வாகிகள் ஊர்ப் பெரியவர்களைக் கெஞ்சிக் கூத்தாடி கூரைவேய்ந்து பள்ளிகளை ஒரளவு பழுதுபார்த்து வைப்பார்கள். அதற்குப் பிறகும் நிரையாக இல்லை என்று சாக்குக் காட்டி, கொடுக்கும் நித உதவியில் பிடித்தம் செய்து மகிழும் ஆய்வாளர் 'புண்ணியவான்களும் பலர் ஆவார்கள். பொதுத்துறைப் பள்ளிகள் எப்படியிருந்தன. அத்தொகுதி ஆட்சிக்குழு உறுப்பினருக்குச் செல்வாக்கு இருந்தால் ஒரளவு கவனிக்கப்படும். இல்லாவிடில் மோசமான நிலையே. எவர் வயிற்றிலும் அடிக்கவில்லை நான் எப்படி நடந்து கொண்டேன்? எவர் வயிற்றிலும் அடிக்கவில்லை என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு. ஆய்வாளராக இருந்தபோது மட்டுமா? பணிக்காலம் முழுவதும் அப்படியே பொறுப்புடன் இயங்கினேன். 'எஞ்ஞான்றும் தன்னை வியவற்க என்பதே பண்பட்ட வாழ்க்கை முறை. இதை உணர்ந்த பிறகும் இப்படி என்னை முன்னிலைப்படுத்தலாமா? கெடுக்காமலும் வயிற்றில் அடிக்காமலும் வழிநடத்தும்படி இளைய தலைமுறைக்கு அறிவுறுத்துவது என் கடமை. குறைகளை நான் மறைத்ததில்லை. அதே நேரத்தில், அவ்வூர் சமுதாயச் சூழலையும் சுட்டிக்காட்டி, கெடுக்காமல், உயிர் வாழ விட்டேன். பத்துத் திங்களாக நடைபெறாத பள்ளி திருவள்ளுர் வட்டத்தில், கண்ணிகைப்பேர் என்ற ஒர் ஊர் உள்ளது. அவ்வூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில், அவர்களுக்கு என்று ஒரு தொடக்கப் பள்ளியிருந்தது. சிறு திருத்தம் அப்படி ஒன்று இயங்கியதாக அலுவலகப் பட்டியல் சொல்லிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/654&oldid=787623" இலிருந்து மீள்விக்கப்பட்டது