பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Յ 12 நினைவு அலைகள் அதைத் தணிக்கை செய்யும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டில் அந்தப் பள்ளி ஒரு முறைகூட எவராலும் பார்வை இடப்படவில்லை. எனவே முதலில் திடீரெனப் பார்வையிட எண்ணினேன். அதற்கருகில் உள்ள பள்ளியொன்றைத் தணிக்கை செய்யச் சென்றபோது, கண்ணிகைப்பேருக்குச் சென்றேன். நேரே கிராம அதிகாரியின் வீட்டிற்குச் சென்றேன். அவர் வீட்டில் இருந்தார். ஆதிதிராவிடப் பள்ளிக்கு அவரிடம் வழி கேட்டேன். 'அங்கே எவரும் போகிற பழக்கம் இல்லை. நான் ஆள் அனுப்புகிறேன். ஆசிரியரையும் பிள்ளைகளையும் இங்கே அழைத்து வரச் சொல்லுகிறேன். இந்தத் திண்ணையில் உட்கார்ந்தபடியே, தணிக்கை செய்துவிடுங்கள். அவர்கள் தெருவில் நிற்பார்கள், என்று சொல்லி உதவ முன் வந்தார். நான் அதற்கு உடன்படவில்லை. வேறு வழியின்றி, அவருடைய ஆளை என்னுடன் அனுப்பினார். குடியிருப்பை நெருங்கும்போது, எதிரில் சிலர் வந்தனர். 'பள்ளிக்கூடம் எங்கே?' என்று கேட்டேன். இடிந்து வீழ்ந்த குடிசையைக் காட்டினார்கள். வீழ்ந்த கூரை கலைக்கப்படாமல் இருந்தது. மண்சுவர் கலைந்திருந்தது. மேலும் துருவிக் கேட்டேன். 'பத்துத் திங்களாய்ப் பள்ளியே நடக்கவில்லை என்று சொன்னார்கள் 'ஆசிரியர் செங்குன்றத்தில் இருந்து வந்து பள்ளியை நடத்துவார். உதவிப்பணம் காலாகாலத்தில் வரவில்லையாம். 'அதனால் பத்து மாதமாக இந்தப் பக்கமே வரவில்லை. பிள்ளைகள் பழையபடி ஆடுமாடு மேய்க்கப் போய்விட்டார்கள் என்றார்கள். திங்கள்தோறும் அப்பள்ளியின் சார்பில், அது உண்மையில் நடந்தது போல் வருகைப்பதிவு முதலிய தகவல்கள், ஆய்வாளர் அலுவலகத் திற்கு வந்தன. அதை வெளிப்படுத்தாமல் அவர்களைக் கிராம அதிகாரி இல்லம் வரை அழைத்துக் கொண்டு போனேன். அவர் முன்பும் 'பள்ளி நடக்கவில்லை என்று கூறினார்கள். அப்படியே எழுதி வாங்கிக்கொண்டு அடுத்த ஊருக்குப் போனேன். சில நாள்கள் ஒடின. ஒரு நாள் காலை பொன்னேரி அலுவலகத்திற்கு ஒருவர் வந்தார். என்னை வணங்கினார். தாம் 'கண்ணிகைப்பேர் குடியிருப்புப் பள்ளி யை நடத்திக் கொண்டிருந்தவர் என்று அறிமகப்படுக்கிக் கொண் எர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/655&oldid=787624" இலிருந்து மீள்விக்கப்பட்டது