பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூ + நினைவு அலைகள் "ஒராண்டு அரசு உதவித்தொகை பெற்றிருக்கிறார். அதைப் பெறவும் மோசடி செய்து இருந்தாலும் அதை மெய்ப்பிப்பது எளிதாயிராது. அவ்வுதவித் தொகையைப் பரிந்துரைத்து வாங்கித் தந்த ஆய்வாளர் ஆசிரியருக்கு ஆதரவாகவே இருப்பார். அந்நிலையில் வழக்கு எந்த வழியில் திருப்பம் பெறுமோ போனது போகட்டும் என்று பழையதை மறந்துவிட்டு, என் காலத்தில் புரட்டு ஏதும் இல்லாதபடி பார்த்துக் கொள்வதே நல்லது இப்படித் தோன்றியதால் ஆசிரிய நிர்வாகி யிடம் 'என்னிடம் வாய்வழிக் கூறியதை எழுதிக்கொடும்' என்றேன். அப்படியே எழுதிக்கொடுத்துவிட்டு 'என்னைச் சிறைக்கு மட்டும் அனுப்பி விடாதீர்கள்' என்று மீண்டும் கெஞ்சினார்; கண்ணிர் வடித்தார். அது நடிப்பாக இருந்தால்தான் என்ன? இருப்பதை வளர்க்க, போனதை மறப்பது இன்றியமையாத தேவை என்று எண்ணினேன். அவருக்கு மேற்கொண்டு தொல்லை வராது என்று சொல்லி அனுப்பினேன். அப்பள்ளிக்கு மேற்கொண்டு பணம் போகவில்லை. அது பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டது. 91. புயலாகப் பணிபுரிந்தேன் வெள்ளத்தில் அகப்பட்டேன் நான் என் பணியில் புயல்போல் இயங்கினேன். ஒரு நாள் அனுப்பப்பட்டுப் பள்ளியைத் தணிக்கை செய்துவிட்டு, மாலை நான்கு மணிக்குமேல் காட்டுரை நோக்கி நடந்தேன். அவ்வூருக்கு நல்ல பாதை கிடையாது. நவம்பர்த் திங்களாகையால் நாள் முழுதும் சிறு துறல் போட்டபடியே இருந்தது. சிறு தூறல் முற்றாது என்ற நம்பிக்கையில் இருந்த குடையை நம்பித் தைரியமாகப் புறப்பட்டேன். என்னுடன் என் கடைநிலை ஊழியர் வந்தார். அவர் என்னிலும் பல்லாண்டு மூத்தவர். 'வில்லி என்று அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவர். அப்பக்கத்து ஊர்கள் அனைத்தும் அவருக்குத் தெரியும். ஒன்றரை மணி நேரத்தில் காட்டுர் போய்ச் சேரலாாம் என்று அவர் சொன்னதால் அவருடன் அவ்வூருக்குச் சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/657&oldid=787626" இலிருந்து மீள்விக்கப்பட்டது