பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/659

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

616 நினைவு அலைகள் ஊர்த்தெரு சேறும் நீருமாக இருந்தது. திண்ணை மாடங்களில் அகல்விளக்குகள் மினுக்கின. பல வீட்டுத் திண்ணைகள் காலியாக இருந்தன. சுழன்று அடிக்கும் மழையைப் பொருட்படுத்தாது, எவரோ ஒருவர் தம் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். தெருவில் நடந்த எங்களைப் பார்த்து, அவரே குரல் கொடுத்தார். 'யாருங்க நீங்கள் இந்தக் கொட்டும் மழையில் இவ்வளவு இருட்டில் எங்கே போகிறீர்கள்?' என்றார். ஊழியர் நான் யார் என்பதைச் சொன்னார். பள்ளியை நோக்கிச் செல்வதைத் தெரிவித்தார். அவர் உடனே திண்ணையை விட்டு இறங்கி வந்தார்; எங்களோடு நடந்தார். வழியில் ஆசிரியரைக் கூப்பிட்டுப் பள்ளிச் சாவியை எடுத்து வரச் செய்தார். தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்தோம். காட்டுரார் என் ஊழியரைக் கடிந்து கொண்டார். 'அய்யாவுக்கு இவ்வழி புதிது. மழைக்காலத்தில் கடப்பது, அதுவும் மாலையில் கடப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது தெரியாது! நீ இந்தப் பக்கத்து ஆள். உனக்குக் கூடவா தெரியவில்லை? அடைமழையிலா அழைத்து வருவது?" என்று வெகுண்டார். நாங்கள் இருவரும் ஊமைகளாகி விட்டோம். வழிகாட்டியவர் தம் வீட்டிற்கு விரைந்தார். கால் மணி நேரத்தில் உணவைக் கொண்டு வந்தார். உண்டு களைப்பை ஆற்றிக் கொண்டோம். காலைச் சிற்றுண்டியும் கொண்டு வருவதாகக் கூறிவிட்டு எங்களிடம் விடைபெற்றுக் கொண்டார். நடந்த அலுப்புத் தீர நிம்மதியாக உறங்கினேன். பொழுது விடிந்ததும் நானாக எழுந்திருக்கவில்லை. ஊழியர் எழுப்ப எழுந்தேன். உப்புமாவும் காப்பியும் வந்தன. உண்டு நிறைவு கொண்டேன். உப்பளம் கண்டேன் அப்பள்ளியைப் பார்த்துவிட்டு அங்கிருந்து, மீன் துறையால் நடத்தப்பட்ட மீனவர் தொடக்கப் பள்ளிக்குச் சென்றேன். அன்று மழை ஒய்ந்திருந்தது. நீண்ட நடைக்குப்பின் அப்பள்ளியை அடைந்தேன். அப்பள்ளியில் மீன்வலை பின்னுதல் மாணவர்களுக்குக் கைத்தொழிலாகக் கற்பிக்கப் பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/659&oldid=787628" இலிருந்து மீள்விக்கப்பட்டது