பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== 24 நினைவு அலைகள் கிராமங்களில் மண்ணெண்ணெய் விளக்கு என்னுடைய எட்டாம் வயதில் எங்கள் ஊரில் மண்ணெண்ணெய் விளக்குகள் மின்னின. முதலில் 'காடை விளக்குகளே அறிமுகம் ஆயின. அடுத்து அரிக்கன்லாந்தர் வந்தது. இப்போது, பல்லாண்டுகளாக மின் விளக்குகள் எரிகின்றன. வீடுகளில் மட்டுமா? இல்லை; தெருக்களிலும் மின் விளக்குகள் எரிகின்றன. இறைப்பிற்கும் மின்ஆற்றல் பெருமளவு பயன்படுகிறது. 'மின்னாற்றல்' என்னும் சொல், என்னுள்ளே வரலாற்றுக் கண்ணோட்டத்தை ஏற்றி வைக்கிறது. புரட்சிகளை நினைவு படுத்துகிறது. என் நினைவில் எழும் புரட்சிகள் இரண்டு. ஒன்று இரஷ்யப் புரட்சி. மற்றொன்று காந்திய வழியில் நம் நாட்டில் நடந்த காந்தியப் புரட்சி. கிளர்ச்சிக் கோலம் பூணாத ஆக்க இயக்கங்களும் மக்கள் வாழ்வை வளப்படுத்தியுள்ளன. சோவியத் ஆட்சிமுறையும் மின்சாரமும் ஊர்தோறும் நிலைத்துவிட்டால், சமதர்மம் தழைத்துவிடும் என்று சோவியத் நாட்டின் தந்தை, மாமேதை லெனின் பறைசாற்றினார். முந்தியது முடிந்தாலும் பிந்தியது கைகூடுமா என்று சோவியத் நாட்டின் பால் நல்லெண்ணம் உடைய ஆங்கில எழுத்தாளர், எச்.ஜி.வெல்ஸ் ஐயப்பட்டார். அதை 'கிரெம்ளின் கோட்டையில் கனவுலகுவாசி அமர்ந்திருக்கிறார்' என்று நயமாக வெளிப்படுத்தினார். ஊர்தோறும் மின்னொளி என்பது வெறும் கனவாக நின்றதா? இல்லை. சோவியத்நாடு முழுவதும் மின்னொளி ஒளிவிடுகிறது. - - உயர் எண்ணங்கள் ஊறும் உத்தமர் ஒருவர் திண்மையான உள்ளமும் பெற்றுவிட்டால், செயற்கரிய செய்ய முடியும் என்பதை லெனின் மெய்ப்பித்துக் காட்டினார். சோவியத் ஆட்சியின் எழுச்சி, எங்கெங்கோஎதிரொலித்தது. இந்திய விடுதலை உணர்வைத் தூண்டியது: பிற விளைவுகளையும் கண்டது. இந்தியத் தொழிலாளர் இயக்கம் தழைத்தது. கிராம இராச்சியம் முளைத்தது; இவற்றைவிட விரைவாக, மின்னொளி நாட்டுப்புறங்களி லெல்லாம் வேகமாக ஊடுருவியது. இந்த நூற்றாண்டின் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தமிழ்நாட்டின் மின்சாரத்துறை நம் இந்தியாவின் முழுக் கவனத்தையும் கவர்ந்து ஈர்த்தது. அது, பல பெரிய இடத்துப் பொறாமையையும் பயங்கரமாகப் பீச்சிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/66&oldid=787629" இலிருந்து மீள்விக்கப்பட்டது