பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

620 நினைவு அலைகள் 'நன்றிங்க அய்யா' என்று கூறிவிட்டு, விடைபெற்றுக் கொண்டார். அவர் சென்றுவிட்ட பிறகு, ஊருடன் பகைக்காதீர் உடம்பு பெரிது; உள்ளங்காலில் முள் தைத்த இடமோ சிறிது. அச்சிறியதைப் பற்றிக் கவலைப்படுவானேன் என்று கவனக்குறைவாக நடப்பது பெரும் கேடாகலாம். உள்ளூர்ப் பகை, கூடியவரையில் விலக்க வேண்டியது. 'நாலு மணித்துளிகள் செலவிட்டு, அவருக்குப் பாடத்திட்டத்தைக் காட்டியிருந்தால் புதிய நண்பர் ஒருவர் உங்களுக்குக் கிட்டியிருக்கலாம். 'சிறு துரும்பும் பல்குத்த உதவும். குடியானவர் நட்பு எதற்குப் பயன்படுமென்று ஏமாறாதீர்கள். 'ஊருடன் ஒன்றி வாழக்கற்றுக் கொள்ளுங்கள்' என்று ஆசிரியரிடம் கூறினேன். அடுத்த ஊர்ப் பள்ளிக்குப் பயணம் ஆனேன். 1940ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் பம்பரம்போல் சுழன்று வேலை பார்த்தேன். முப்பது பள்ளிகளின் ஆண்டுத் தணிக்கையையும் நாற்பத்து நான்கு பள்ளிகளின் பார்வையையும் முடித்தேன். ஒரே திங்களில் இவ்வளவு வேலை செய்தவர்கள் இல்லையென்று, அலுவலக எழுத்தரும் ஆய்வாளரும் என்னிடம் வலியப் பாராட்டினார்கள். தொடக்கம் நன்றாயிருக்கிறதே, என்று எண்ணி என்னுள் மகிழ்ந்தேன். நவம்பர்த் திங்கள் முடிந்ததும் அத்திங்களின் நாட்குறிப்புகளுக்குப் படி எடுத்தேன். தணிக்கை அறிக்கைகளுக்கும் படிகள் எடுத்தேன். ஆய்வாளர் வழியாக மாவட்டக் கல்வி அலுவலருக்கு அவற்றை அனுப்பி வைத்தேன். இது ஆய்வாளரின் கடமைகளில் ஒன்று. பிறகு டிசம்பர் திங்களுக்கான தணிக்கையிலும் பார்வையிலும் மூழ்கினேன். குறைகளைத் திருத்துங்கள் முதல் சனிக்கிழமை அன்று மாலை சென்னைக்குச் சென்றேன். அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை மாவட்டக் கல்வி அலுவலர் திரு. சச்சிதானந்தம் பிள்ளை அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். அவர் இல்லம் தியாகராய நகரில் இருந்தது. அவரை அங்குக் கண்டு வணங்கி, என்னுடைய ஒரு திங்கள் சாதனையைத் தெரிவித்தேன். அவருடைய மகிழ்ச்சியை அவரது கண்களில் கண்டேன். மெல்ல வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டேன். அதைக் கேட்டபின், அப்பெரியவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/663&oldid=787633" இலிருந்து மீள்விக்கப்பட்டது