பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 621 'என்ன என் நீண்ட பணிக்காலத்தில், இப்படிக் கோரிய எவரையும் நான் கண்டதில்லை. நீர்தான் முதன்முதலாக இப்படி வேண்டிக் கொள்ளுகிறீர். இது நல்ல பண்பாகவே தோன்றுகிறது' என்று வியப்போடு பதில் கூறினார். 'அப்படிங்களா அய்யா! நான் இளையவன்; வேலைக்குப் புதியவன்; எந்நிலையிலாவது, இருபத்தேழு ஆண்டுகள் இந்தக் கல்வித் துறையில் பணியாற்ற வேண்டியவன். அதனால்..... என் பேச்சு முடியவில்லை. அதற்குள் திருவாளர் சச்சிதானந்தம் பிள்ளை குறுக்கிட்டார். 'மீண்டும், இப்படியொரு இளைஞரை இப்போதே முதன்முறை காண்கிறேன்' என்று சொல்லி, தமது வியப்பைக் காட்டினார். அப்படி என்ன கேரினேன்? 'அய்யா! நான் ஆண்டுத் தணிக்கை அறிக்கைகளை அனுப்பி விட்டேன். திங்கள்தோறும் அனுப்பிக்கொண்டு இருப்பேன். அவற்றைத் தாங்கள் பார்த்து மதிப்புரை வழங்க இருக்கிறீர்கள். 'நிறை இருந்தால், எழுத்து வாயிலாகத் தெரிவித்து விடுவீர்கள். 'குறைகள் அதிகமாக இருந்தால், அவ்வளவையும் சுட்டிக் காட்டினால் தொடக்க நிலையில் உள்ளவனுக்கு வேலைக்கே தீங்கு வரலாம்: எடுத்துக் காட்டாமல் விட்டால், குறையை மறைத்த குற்றம் வரும்; தர்ம சங்கடமாயிருக்கிறதே என்று தாங்கள் வேதனைப்படக்கூடும். நான் திங்கள்தோறும் தாங்கள் குறிப்பிடும் நேரம், இங்கு வந்து தங்களைக் காண்கிறேன். எந்தெந்தக் குறைகளைக் கோப்பில் பதியாமல், நேரில் சொல்லித் திருத்தலாமோ, அவற்றை என்னிடம் சொல்ல வேண்டுகிறேன். 'அப்படி உதவி செய்தால் அப்போதைக் கப்போது சீராவேன். என்னுடைய செயல் நேர்த்தி அதிகமாகும். நான் திறமையில் வளர்ந்துகொண்டே இருக்க வாய்ப்பாக அமையும். அப்படி வளர்வது நான் பணியாற்றும் கல்வித் துறைக்கும் நல்லதாகும். தயவு செய்து இத்தகைய உதவியைச் செய்யுங்கள் அய்யா' மேற்கூறியதே, என் புதுமையான வேண்டுதல். அந்த வேண்டுகோள், நான் கையாண்ட தந்திரமல்ல. அது என் இயல்பை ஒட்டியது. செயல்திறமையின் வளர்ச்சிக்கு வரம்பு இல்லை. அது எல்லா வயதிலும் வளர்ந்துகொண்டே இருக்கக்கூடும். அத்தகைய நம்பிக்கையால் பிறந்தது அவ்வேண்டுகோள். அது, உண்மையான உள்ளத்தின் ஆழத்திலிருந்து பிறந்தது: இன்றும் என்னோடு இருக்கும் இயல்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/664&oldid=787634" இலிருந்து மீள்விக்கப்பட்டது