பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 நினைவு அலைகள் இப்போதும் பொழுது போகாத வேளை, என் பழைய எழுத்துகளைத் திரும்பப் படித்துப் பார்ப்பது உண்டு. அவ்வேளை, அவ்வெழுத்துக்கள் மேலும் கூர்மை பெறலாம்; தெளிவு பெறலாம்; வலிமை பெறலாம்' என்று உணர்வதுண்டு. அது, பின்னர் வரும் எழுத்துப் பணிக்கு, செழுமை சேர்க்க உதவுவதை உணர்கிறேன். நான் இன்றும் அறிவில், தெளிவில், பண்பில், சமாளிக்கும் திறனில் வளர்ந்துகொண்டு இருப்பதாகவே கருதுகிறேன். அகந்தை என்று ஒதுக்காதீர்கள். எழுபத்திரண்டு வயதில் வளர்ச்சியா என்று சிரிக்காதீர்கள்! முதல் திங்களிலேயே மிகப்பெரிய தணிக்கை சாதனை புரிந்துள்ளேன். இந்த இனிய நினைப்பில், மகிழ்ச்சியோடு ஆண்டுத் தணிக்கையை நடத்திக் கொண்டிருந்தேன். நீதியே இல்லையா? டிசம்பர் இருபதாம் நாள் வாக்கில், அஞ்சல் ஒன்று வந்தது. அது அதிர்ச்சி தந்தது. அது என்ன? நவம்பர்த் திங்கள் நான் செய்த தணிக்கைகள் பற்றிய அறிக்கைகளின் மேல் மதிப்புரை; அது என்ன சொல்லிற்று? நிறைய வேலை செய்ததைப் பற்றி ஒன்றுமே பாராட்டுச் சொல்லவில்லை. ஆனால் குறைகான முயன்றது. உண்மை தானாகப் பேசாது போலும். நல்லதைச் சுட்டிக்காட்டு வதற்கும் வேண்டியவர்கள் தேவை போலும். 'பள்ளிப் பார்வைகளைப் பொறுத்த மட்டிலும் நான்கு பள்ளிகளில் முந்திய பார்வைக்கும் இப்போதைய பார்வைக்கும் இடையே, போதிய காலம், கழியவில்லை. மூன்று பள்ளிகள் நவம்பர்த் திங்களில் தான் முதன் முறையாகப் பார்வையிடப் பட்டன. இரண்டும் பெரிய குறைகள். சரியானபடி திட்டமிடாத, முறைகேடான, இப்பார்வைகள் கண்டிக்கத் தக்கன. வருங்காலத்தில், இப்படி நடந்தால் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இளந்துணை ஆய்வாளர் எச்சரிக்கப்படுகிறார். இப்படி வந்தது மதிப்பீட்டு ஆணை. படித்தேன்; தலை சுற்றிற்று; நீதியே இல்லையா என்ற கேள்வி மின்னிற்று. கேட்க முடியுமா? அழவேண்டும்போல் இருந்தது. அழுத் பயன்? மீண்டும் கண்டனத்தைப் படித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/665&oldid=787635" இலிருந்து மீள்விக்கப்பட்டது