பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு Uzooi அவ்வானை அனுப்பிய மண்டலப் பள்ளிகளின் ஆய்வாளர் மிரட்டலுக்குப் பெயர் பெற்றவர். குற்றம் காண்பது ஒன்றையே அறிந்தவர். ஏதாவது நிறையைக் கண்டபோதும் அதை உள்ளக் கிணற்றில் போட்டுவிட்டுக் குறை போலத் தோன்றுவனவற்றை மிகையாக்கி மிரட்டும் புலி அவர் என்பது கல்வித் துறையிலுள்ள அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும், என்று என் மனம் என்னைத் தேற்ற முயன்றது. மேலும் மண்டல ஆய்வாளர் அலுவலகங்களை மானேஜர்களே ஆட்டிப் படைத்தார்கள் என்பது அந்தக் காலத்தில் நிலவி வந்த அக்கப்போர். 'மிரட்டல் புத்தியும் உருட்டல் திறமையும் இணைந்தால், நீதி மயங்கத்தான் செய்யும்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக் கொள்ள முயன்றேன். 'அக்டோபர்வரை, மூன்று பள்ளிகளை முதல்முறையாகக் கூடப் பார்க்காது தள்ளிப்போட்டது, முன்பிருந்தவர்கள் குறையே ஒழிய என் குறையல்ல என்று பதில் எழுதினால் என்ன? இப்படியொரு எண்ணம் மின்னிற்று. அடி மனம் 'சண்டையை வளர்க்காதே' என்றது, அடுத்த நொடி. 'உன் கடமையை உண்மையாகச் செய்! பொறுப்பாகச் செய் வந்தது வரட்டும் நன்றும் தீதும் பிறர்தரவாரா'இப்படியொரு இதமானசிந்தனை. காலம் மெல்லப் புண்ணை ஆற்ற உதவிற்று. ஓயாத தணிக்கை வேலை புண்ணை நினைக்க நேரம் விடவில்லை. - 'புண்பட்டவர்கள் வேலையில் மூழ்கிவிடுவது நல்லது என்பது நான் இளமையில் கற்ற பாடம். 93. திடீர் மாற்றல் ஆசிரியர்களின் அன்பைப் பெற்றேன் 'கற்றபின் நிற்க' என்பது பொதுமறை. அதைப் பின்பற்ற முயன்றேன். முதல் திங்களிலேயே எவரும் செய்யாத அளவு பணி செய்திருந்தும் முன்னே இருந்தவர்கள் புரிந்த தவறுகளுக்கு என்ன்னக் குறை சொன்னதால் ஏற்பட்ட புண்ணை ஆற்றிக்கொள்ளும் பொருட்டும் டிசம்பர்த் திங்களிலும் அலைந்து அலைந்து, தணிக்கை செய்தேன், பள்ளிகளைப் பார்வையிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/666&oldid=787636" இலிருந்து மீள்விக்கப்பட்டது