பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E24 நினைவு அலைகள் ஆசிரியர் சங்கக் கூட்டங்களுக்குச் சென்றேன்; உரையாற்றினேன். ஆசிரியர்களின் நல்லெண்ணத்தைத் தாராளமாகப் பெற்றேன். என்னை இயக்க வேண்டியவர், அடிப்படையில்லாத குறையைக் கற்பித்துத் தொல்லை கொடுப்பினும் என்னால் வழி நடத்தப்பட வேண்டிய ஆசிரியர்கள், பெருமதிப்புக் கொண்டிருந்ததை உணர்ந்தது, நன் மருந்தாக இருந்தது. 'வாழ்க்கை வசந்தமும் அல்ல, புயல் சீறும் கார்காலமும் அல்ல! இலையுதிர் காலமும் அல்ல! இத்தனையும் இணைந்தது! வெவ்வேறு அளவில் இணைந்தது ஒரே நேரத்தில் பலவும் இணைந்தது!’ எனவே, ‘மண்டை உள்ள வரை சளி உண்டு. வாழ்க்கை உள்ளவரை தொல்லை உண்டு' என்பது உலக வழக்கு. நான் மட்டும் பொது விதிக்கு விலக்காக முடியுமா? முடியாது. நாட்டை விட்டுக் காடேகி, கடுந்தவம் புரிவோர், எதிரிட்டுச் செல்ல வேண்டிய சிறுமைகள் ஒருவகை. நாட்டில், நாட்டு மக்களில் ஒருவனாகச் சாதாரண வாழ்க்கை வாழ்பவனும் எதிரிட்டு வெல்லவேண்டிய சின்னஞ்சிறு கவலைகள் பலவாகும. சாதனையில் முதல் என்று என்னை நானே பாராட்டிக் கொண்டிருக்கையில், மூத்த ஆய்வாளர்களின் பட்டறிவினைத் துணையாகக் கொண்டு, திறமையை வளர்த்துக்கொண்டு, முதல் தரமான ஆய்வாளனாக விளங்கத் துடிக்கையில், இரண்டாவது இடியொன்று எதிர்பாராமல் என்மேல் வீழ்ந்தது. டிசம்பர்த் திங்களின் மூன்றாவது சனிக்கிழமை, முற்பகல்; ஒர் ஆசிரிய மையக் கூட்டத்தில் பேசினேன். பிற்பகல், மற்றோர் மையக்கூட்டத்தில் உரையாற்றினேன். அடுத்த நாள் விடுமுறை அல்லவா? வழக்கம்போல் சென்னைக்குச் செல்ல முயன்றேன். E. சென்னை நெல்லூர் நெடுஞ்சாலையின்மேல் இருப்பது சோழவரம் என்னும் ஊர். அவ்வூர் பேருந்து நிலையத்தண்டை அமர்ந்திருந்தேன். எதறகாக? சென்னை செல்லும் பேருந்துக்காக. பேருந்து வந்ததா? நெடுநேரம் வரவில்லை. பிறகு இரண்டொன்று நிற்காமலே விரைந்தோடின. ஏன்? ஏற்கெனவே, புளி அடைப்பதுபோல் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்ததால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/667&oldid=787637" இலிருந்து மீள்விக்கப்பட்டது