பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு Ꮾ25 வெளிச்சம் விரைந்து, மிக விரைந்து குறைந்தது! இருள் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்தது. அந்நிலையில், என்னை வழியனுப்பக் காத்திருந்த ஆசிரியர். எனக்கு மாற்று ஆலோசனை கூறினார். 'அய்யா இப்போதே இருட்டிவிட்டது. அடுத்த பேருந்து எப்போது என்று சொல்ல முடியாது. அகாலத்தில் பயணம் செய்ய வேண்டாம். 'தயவு செய்து, இன்றிரவு, இவ்வூர்ப் பள்ளியில் தங்கிவிடுங்கள். நொடியில் உணவுக்கு ஏற்பாடு செய்துவிடுகிறேன். பொழுது விடிய ஒரு பேருந்து வரும்; அதில் எப்படியும் இடம் கிடைக்கும். - 'காலை எட்டு ஒன்பது மணிக்குள் வீடுபோய்ச் சேர்ந்துவிடலாம்.' என்று மெல்லச் சொல்லிக் கொண்டிருந்தார். இரவு தங்கினால், ஆசிரியர்.தயவில் உணவுபெற நேரிடும். அப்புறம் மெல்ல மெல்ல உரிமை கொண்டாடத் தொடங்கிவிட்டால் எப்படி எப்படிப் போய் முடியுமோ? இப்படிக் குழம்பிக் கொண்டிருந்தேன். அவ்வேளை, பொன்னேரியில் இருந்து ஒரு துரதர் வந்தார். சில மீட்டர் தொலைவில் அடையாளம் தெரிந்தது. ஆம், பொன்னேரிப் பள்ளி ஆய்வாளரின் கடைநிலை ஊழியர் ஈருருளியில் என்னை நெருங்கினார். 'நல்ல செய்தியாக இராது" என்று நினைத்தேன். இமைப்பொழுதில் என் நினைப்பு உறுதியாயிற்று. தஞ்சைக்கு மாற்றல் வந்தவர், என்னிடம் ஒரு கடிதத்தை நீட்டினார். பதற்றத்தோடு அதை உடைத்துப் பார்த்தேன். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. சமாளித்துக்கொண்டு இரண்டாம் முறை படித்தேன். அது என்ன சொல்லிற்று? ஆணையிட்டது. என்ன ஆனை? 'இளந்துணை ஆய்வாளராகிய நெ.து. சுந்தரவடிவேலு பொன்னேரிப் பதவியை இன்றே திரு. அமிர்தலிங்க தேசிகரிடம் ஒப்படைக்க வேண்டும். உடனே தஞ்சாவூர் சரகத்தில் இளந்துணை ஆய்வாளராகச் சேரவேண்டும். 'புதிய இடத்தில் சேர்வதற்கான வழக்கமான காலத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனே தஞ்சாவூருக்குச் செல்ல வேண்டும்' என்பது ஆணை. அரசு ஊழியம், தேள் கடிகளைப் பொறுத்துக் கொள்வது என்பதை மட்டும் முன்னர் தெரிந்து கொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/668&oldid=787638" இலிருந்து மீள்விக்கப்பட்டது