பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 25 மின் வளர்ச்சியின் பொற்காலத் தலைவர் ஒன்றே சொல்லி நன்றே முடிக்கும் ஏழைபங்காளர், சாதனையாளர், கர்மவீரர்காமராசரின் தொலைநோக்கும் சொற்செட்டும், வினைக்குரிய வரை வினையாளராக விடும் பண்பும், திரு அப்பாதுரை என்னும் வல்லாரை முழுமையாகச் செயல்பட விட்டது. மின்சாரத்துறையின் தலைமைப் பொறியாளராகத் திரு அப்பாதுரை இயங்கிய காலம், தமிழ்நாட்டின் மின்வளர்ச்சியின் பொற்காலம் ஆகும். - புற ஒளி தரும் மின்விளக்குகளும் அக ஒளி வழங்கும் கல்விச் சாலைகளும், போட்டி போட்டுக்கொண்டு சிற்றுரைத் தேடிச்சென்று செயல்பட்ட காலத்தைப் பொற்காலம் என்று அழைக்க நான முடியுமா? திரு. அப்பாதுரையார் தொழில் வல்லார் மட்டுமல்லர் தொண்டின் திரு உருவம். எறும்பின் சுறுசுறுப்பையும் மிஞ்சிச் செயல்படக் கூடியவர். குளுகுளு அறையில் உட்கார்ந்தபடியே, இதைச் செய் அதைச் செய்' என்று ஆணையிட்டு விட்டு, செம்மையாக நடந்தால், தனக்குப் பெருமை சேர்த்துக்கொண்டு, தவறாகிவிட்டால் பிறர்மேல் பழியும் போட்டுவிட்டுத், தப்பித்துக் கொள்ளும் பெரிய அதிகாரிகள் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்லர். நல்ல நாணயமான ஊழியர். "எங்கள் தலைமைப் பொறியர், കiാ எட்டு மணிக்கே, எத்தனை துரத்தில், எந்த மின்நிலையத்தையோ மின்கம்பத்தையோ சோதித்துக் கொண்டிருப்பாரே!சரியாகப் பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று தணிக்கை செய்ய வேண்டியிருந்தால் அவரே மேலே ஏறித் தணிக்கை செய்துவிடுவார். அவர் இருக்கும்வரை, கண்ணிலே விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டே வேலை செய்வோம்' என்று மின்சார வாரிய அலுவலர்கள், பூரிப்போடும், பெருமையோடும், மனநிறைவோடும் பேசுவதைப் பலமுறை கேட்டு மகிழ்ந்தவன் நான். பிறநாட்டு அழைப்புகளை ஒதுக்கி, தமிழ்நாட்டோடு திரு அப்பாதுரையார்முடங்கியதால் அவருக்கு நல்லதோகெட்டதோ, யான் அறியேன். தன்னேரில்லாத தமிழ் மேதையொருவரை உலகம் உணர்ந்து 'ாராட்டும் வாய்ப்பினை, நாம் இழந்து விட்டோம். அது கசப்பான உண்மையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/67&oldid=787640" இலிருந்து மீள்விக்கப்பட்டது