பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 627 'நல்ல வேளை, நீங்கள் சென்னைக்குப் புறப்படுவதற்கு முன் இங்கு வந்தேன். சென்னைக்குப் போகாமல், நேரே பொன்னேரிக்குத் திரும்பி வரட்டும். தேசிகரிடம் வேலையை மாற்றிக் கொடுத்து விட்டுச் செல்லட்டும் என்று அய்யர் சொல்லிவிட்டு வரச் சொன்னார். சின்று தகவல் கொடுத்தார். எனக்குத் துணையாக நின்று கொண்டிருந்த ஆசிரியர் பதறினாடி ஆசிரியரின் கோபம் திருட்டுப் புரட்டுச் செய்தவர்களை விடுவிக்கத்தான், புதிய அலுவலர், ஆனையும் கையுமாக வருவார். சாதாரண மாமூல் மாறுதலுக்குப் போதிய முன் அறிவிப்பு வேண்டாமா? நான்கு மணிக்கு வந்து, ஆறு மணிக்குள் இடத்தைக் காலிசெய் என்பது பெரிய அநீதிங்க. - 'இது உலகப்போர் நடந்து கொண்டு இருக்கிற காலம்; மக்கா, தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களோ சட்டமன்றமோ இல், எனவே அதிகாரிகள் அட்டகாசத்திற்கு அளவில்லை. அவ: ; வைத்தால் குடுமி; சிரைத்தால் மொட்டையாக' இருக்கிறது. 'இப்படியே அடிக்கடி மாற்றுவது பொன்னேரிக்குச் கூட, ஆகிவிட்டது. இங்கே இருக்க இசைவோரை விட்டு வைப்பதில்லை; விரும்பாதவர்களைப் போட்டுப் போட்டு, ஆண்டுக்கு 2ான்கு ஆய்வாளர்களைக் காண வைக்கிறார்கள். 'அய்யா அளவுமீறிப் பேசுவதாகத் தயவுசெய்து நினைக்காதீர்கள். - திருவொற்றியூர் சண்முகம், மாவட்ட ஆட்சிக்குழுத் துணைத் தலைவராக இருந்தவர். ஆட்சியாளருக்குப் போர்ஆதரவிற்கு அவரை, போன்றவர்களுடைய உதவி தேவை. இப்போது அவர் சொல்வதை அதிகாரிகள் கேட்பார்கள். அவரைப் பிடித்து மாறுதல் ஆனையை மாற்றிவிடுவோம். "நாளைக் காலை நானே உங்களை அவரிடம் அழைத்துக் கொண்டு போய். இதை முடித்துக்கொடுக்கிறேன். நீங்கள் பொன்னேக்கு; செல்ல வேண்டாம்; பதவியைப் புதியவரிடம் ஒப்படைக்க வேண்டாம்' என்று வேண்டினார். திருவொற்றியூர் சண்முகம் எனக்கு வேண்டியவர் என்பதை நான் அவரிடம் காட்டிக் கொள்ளவில்லை. Ho ஆனைக்குக் கட்டுப்படுதல் எனக்குச் சபலமும் ஏற்படவில்லை. சரியோ தவறோ, எனக்கென்று சில முறைகளை நான் முடிவு செய்து வைத்துக் கொண்டிருந்தே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/670&oldid=787641" இலிருந்து மீள்விக்கப்பட்டது