பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 633 குறுகிய கால அறிவிப்பில், பயணச்சீட்டு பெற முடிந்த நாள் அது. புகைவண்டி தஞ்சையை நெருங்கும்போது பொன்னம்பலனார் என்னை எழுப்பிவிட்டார். - இருவரும் அமைதியாகத் தஞ்சைக் கூடலில் இறங்கினோம். "அத்தான் இவ்வூரில் போகவர ஒற்றை மாட்டுவண்டி மட்டுமே உண்டு. கல்யாணசுந்தரம் வீடு தெற்கு அலங்கத்தில் இருக்கிறது; சற்றுத் தொலைவு. மாட்டு வண்டியிலேயே போவோம்' என்று பேச்சுக் கொடுத்தார். நிலையத்தை விட்டு வெளியே வந்தோம். ஒற்றை மாட்டு வண்டிக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். பொன்னம்பலனார் ஒரு வண்டியை அமர்த்தினார். அதில் ஏறிச்சென்றோம். வழியில் சில பழக்கடைகள் திறந்து இருந்தன. அவற்றைக் கண்டதும் வண்டியை நிறுத்தினார். பழக்கடைக்குச் சென்றார். இரண்டு சீப்பு பேயன் பழங்களையும் ஒரு செண்டு கதம்பத்தையும் வாங்கிக்கொண்டு நொடியில் வந்து விட்டார். 'ஆய்வாளரிடம் பழம் கொண்டு போனால் அவர் சினந்து கொண்டால் என்ன செய்வது?' என்றேன். 'நீங்கள் கொண்டு போனால் சினந்து கொள்ளலாம். நான் நெருங்கிய நண்பன். நான் கொடுக்கும் இரு சீப்புப் பழங்களுக்காக எரிச்சல் கொள்ளமாட்டார்' என்று ஆறுதல் சொன்னார். கல்யாணசுந்தரம் வீட்டை அடைந்தோம். அப்போதும் விடியற்காலை வரவில்லை. எனவே வீடு மூடி இருந்தது. இருவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து காத்து இருந்தோம். 95. ஒராசிரியர் நலப்பள்ளி விடியற்காலை அய்ந்தரை மணி இருக்கும். ஆய்வாளர் திரு. கல்யாணசுந்தரம் வீட்டுக்கு வேலைக்காரப் பெண் ஒருத்தி வந்தாள். எங்களைக் கண்டாள். திகைத்தாள். அக்குறிப்பை அறிந்த பொன்னம்பலனார், 'நாங்கள் அய்யாவைப் பார்க்க வெளியூரில் இருந்து வந்திருக்கிறோம். அவரை எழுப்ப வேண்டாம். அவர் வழக்கப்படி எழுந்திருக்கட்டும். அப்புறம் சொன்னால் போதும். அதுவரை நாங்கள் காத்திருப்போம்' என்று கூறினார். - அப்பெண், வீட்டுக் கதவைத் தட்டினாள். வீட்டரசியார் கதவைத் திறந்தார். உள்ளே சென்ற பெண் அம்மையாரிடம் யாரோ இரு ஆண்கள், வந்து காத்திருப்பதாகக் கூறினாள் போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/676&oldid=787647" இலிருந்து மீள்விக்கப்பட்டது