பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 635 நிக்கல்சன் கூட்டுறவு வங்கி மாடியில் ஒர் அறை கிடைத்தது. அங்குக் குடிபெயர்ந்தேன். அதற்கு எதிரில் மரக்கறி உணவுச்சாலை இருந்தது. அங்கே உணவுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பொன்னம்பலனார் இயக்க வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டார். நான் தனிக்கை வேலையைத் தொடங்கினேன். கிறுத்துமசு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்தன. நான் திடீர்ப்பார்வையைத் தொடங்கினேன். - நான் தஞ்சையில் பணியேற்றுக்கொண்ட அன்றே, அலுவலக எழுத்தர், உடனே கவனிக்கப்பட வேண்டிய இரு கோப்புக் கட்டுகளை என்முன் வைத்தார். இரண்டையும் முழுமையாகப் படித்துப் பார்த்தேன். இரண்டிலுமே ஒரு திங்களுக்கு முன்னரே, முடிவு எடுத்து இருக்க வேண்டுமென்பது புலனாயிற்று. அப்படி முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் இரண்டாவது இளந்துணை ஆய்வாளர் பதவியில் எவரும் இல்லை. அத்தவக்கம் தொடர்ந்தால் எனக்குத் தொல்லை வரும் என்பது புரிந்தது. - தொடங்குகிறபோதே இப்படியா தொடங்க வேண்டும்?' என்று என் உள்ளம் கலங்கிற்று. அப்படி என்ன கெட் கொ க்கம் , தொடக்கமே மூடுவிழா தஞ்சை - திருச்சி இருப்புப் பாதையில் தஞ்சைக்கு அடுத்த ஆலக்குடி புகை வண்டி நிலையத்திற்கு அருகில் கல்விராயன்பட்டி என்று ஒர் ஊர் உள்ளது. அவ்வூரில் ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக ஒராசிரியர் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அது சில ஆண்டுகள் நடந்தது. அப்புறம்? மாணாக்கர் வருகை ஒராசிரியருக்கும் போதாத அளவு குறைந்து விட்டது. தொடர்ந்து மூன்று நான்கு பார்வைகளின்போது மாணவர்களின் குறைந்த அளவு வருகைகூட இல்லை. எனவே, அப்பள்ளியை நடத்துவதில் பயனில்லை எனக் கல்வித்துறை கருதிற்று. நடந்து கொண்டிருக்கும் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு முன், விளக்கம் கேட்டு ஒரு திங்கள் முன் அறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்பது கல்வித் துறையின் விதியாகும். அதையொட்டி முன் அறிவிப்புக் கொடுத்து, அந்தப் பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் எடுத்துவிடக்கூடாது என்ற ஆதிதிராவிட நலத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/678&oldid=787649" இலிருந்து மீள்விக்கப்பட்டது