பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 நினைவு அலைகள் குடுகுடுவையின் மூடியைக் கழற்றினேன். பிறகு 'இதற்குள் இருக்கும் காப்பியைக் குவளையில் ஊற்றும் என்றேன். நான் பள்ளிக்குள் நுழைவதைக் கண்டதும் குடியிருப்பிலிருந்து சில பையன்களும் பெண்களும் ஓடி வந்தார்கள். வயது முதிர்ந்த ஆண்களும் பெண்களும் பள்ளியைச் சுற்றி நின்றபடி வேடிக்கை பார்த்தார்கள். ஆசிரியர் காப்பியைத் தொட அஞ்சினார். 'நீரும் மனிதர்தான்; காப்பியை ஊற்றிக்கொடும் என்று உறுதியாக ஆணையிட்டேன். வேதனையோடு, ஆசிரியர் கீழ்ப்படிந்தார். நான் காப்பியைச் சிறுகச் சிறுகக் குடித்து முடித்தேன். - வந்திருந்தோர், வியப்பில் ஆழ்ந்தார்கள். ஆய்வாளர், ஆதிதிராவிடர் கையால் காப்பி வாங்கிக் குடித்ததை அவர்கள் கண்டதே இல்லை. இதைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியாமல் எல்லாரும் திருதிருவென விழித்தார்கள். 96. ஆதிதிராவிடர்கள் அனுபவித்த கொடுமைகள் தீண்டாமைக் கொடுமை நான், கல்விராயன்பட்டி நலப்பள்ளியில், ஆதிதிராவிட ஆசிரியருடைய கண்ணாடிக் குவளையில் அவர் காப்பி ஊற்றிக் கொடுத்ததைக் குடித்ததைப் பார்த்த முதியவர்கள் ஏன் திருதிருவென விழித்தார்கள்? அக்கால ஆதிதிராவிடர்கள் அநேகமாகக் கூலிகள். அவர்கள் ஆண்டை நிலமுடையோர் - வயலில் அதிகாலையில் இருந்து வேலை செய்துவிட்டு, நடுப்பகல் உணவுக்காகத் தத்தம் ஒலைப் பட்டைகளைத் தரையில் வைத்துவிட்டு எட்டி நிற்பார்கள். ஒவ்வொரு பட்டையிலும் பண்ணையார் கட்டளைப்படி சோறோ, கூழோ போட்டு நிரப்புவார்கள். அப்போது பட்டைக்கு உரிய ஆதிதிராவிடர் அருகில் இருந்தால் தீட்டாகிவிடும். எது திட்டாகிவிடும்? கஞ்சி ஊற்றும் சாதியாரான இந்து திட்டாகிவிடுவார். ஆதிதிராவிடர் பட்டையை ஏந்தி நின்றால்கூட, அவருடைய 'திண்டாமை பட்டை வழிப்பாய்ந்து, அதிலிருந்து தாவி, இடைவெளியைக் கடந்து, பரிமாறும் அளைப் பிடிக்கக் கொள்ளமாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/681&oldid=787654" இலிருந்து மீள்விக்கப்பட்டது