பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 641 தாங்கள் நாய்கள் அல்ல - நக்கிக் குடிக்க! தாங்கள் மக்களாக இருப்பதால் அள்ளிக் குடிக்கவும், மொண்டு குடிக்கவும், வைத்திருந்து குடிக்கவும் இயலும், என்னும் எண்ணத்திற்கே இடம் கொடுக்கவே மறுத்து இருந்தவர்கள். பொதுத் தெருவே நடப்பதற்கோ, பிற மக்கள் அருகில் நிற்பதற்கோ, உரிமை கொண்டாடவும் முடியாத ஆதிதிராவிடர்களுக்கு, ஆதிதிராவிடர் ஊற்றிக் கொடுத்த காப்பியை நான் அருந்தியது அதிர்ச்சியைத் தந்தது. அடுத்த கணம் அச்சமூட்டியது. இந்த விபரீதத்தால், தங்களுக்குப் பெருந்தீங்கு விளையுமோ என்று அஞ்சினார்கள். அதை என் ஊழியர் அரங்கராஜாவிடம் தெரிவித்தார்கள். அவர் என்ன செய்வார்? "கிறுக்கு ஆய்வாளருக்கு அறிவுரை கூற முடியுமா? ஊராருடன் உரையாடல் என் புரட்சி யை வேடிக்கை பார்த்தவர்கள், இமைப்பொழுதில் அச்சத்தை விட்டார்கள். என்பால் அன்பு கொண்டார்கள்; பரிவு கொண்டார்கள். பலரையும் கூட்டி வந்து விட்டார்கள். அப்படிக் கூடியவர்களில் மூன்று நான்கு பேர்களே கிழவர்கள். மற்றவர்கள் எல்லாம் கிழவிகள். அனைவரையும் பள்ளிக்குள் அழைத்தேன். தயங்கினார்கள். இரண்டு மூன்று முறை அழைத்த பிறகே உள்ளே வந்தார்கள். அவர்களோடு கலந்து உரையாடினேன். அதுவும் புதுமை. அதன் சுருக்கம் இதோ. 'பாட்டிங்களே! உங்கள் வீடுகளில் படிக்கும் வயது பிள்ளைகள் இல்லையா? ' 'ஏஞ்சாமி, ஆண்டவன் அதற்கு ஒன்றும் குறை வைக்கவில்லை, சாமி. 'அய்ந்து வயதுக்கு மேற்பட்ட எல்லாப் பையன்களும் பெண்களும் வேலைக்குப் போகிறார்களா?' ஆற்றிலே தண்ணீர் விடும்போது, சிறிசும் பெருசுமா பலருக்கும் வேலை இருக்கும். மற்றப்போது - நெடுநாள் வேலையிராது.' 'வேலையில்லாத சிறுவர் சிறுமியர் என்ன செய்வார்கள்?" 'கண்டபடி, திரிந்து கொண்டிருப்பார்கள். பசி வேளைக்குக் கஞ்சி தேடி வருவார்கள். இருக்கிறதைக் குடித்துவிட்டு மறுபடியும் ஊர் சுற்றப்போய் விடுவார்கள். அத்தனையும் வீட்டில் அடைந்து கிடந்தால் குடிசையில் குந்தவும் இடம் இருக்காது சாமி என்றார்கள் பாட்டிகள். 'நீங்கள் எம்.சி. ராஜா என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/684&oldid=787660" இலிருந்து மீள்விக்கப்பட்டது