பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 நினைவு அலைகள் 'தெரியவில்லைசாமி!' 'சகசானந்தசாமி என்றாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 'இல்லைங்க சாமி? 'என். சிவராஜ் என்ற பேராவது தெரியுமா?" 'கேள்விப்பட்டதில்லை எசமான். ' 'இவர்கள் உங்களவர்கள். உங்களுக்காகப் பாடுபடுபவர்கள். படித்தவர்கள்; அவர்களில் சிவராஜ் என்பர், சட்டம் படித்துப் பட்டம் பெற்றவர். 'உங்கள் பிள்ளைகளையும் படிக்க வைத்தால், அவர்களைப் போல, சிலவேளை, அவர்களைவிடப் பெரியவர்களாக வரலாம், அது உங்களுக்கு நல்லதுதானே! சும்மாத் திரிகிற பையன்களையும் பெண்களையும் ஆகிலும் பள்ளிக்கு அனுப்பி வையுங்களேன்' என்றேன். 'ஆண்டிக்கு ஏன் சாமி இலைக்கணக்கு? பிள்ளைகள் முன்னுக்கு வருகிறார்களோ இல்லையோ அது அது அவர்கள் தலை எழுத்து. நீங்கள் கண்கண்ட தெய்வம் போல வந்திருக்கிறீர்கள். எங்களை மதித்துப் பேசுகிறீர்கள். எட்டி நில் என்று சொன்னதையே இதுவரைக் கேள்விப்பட்டு இருக்கிறோம். இப்படி, கிட்ட நின்று பார்ப்பது இதுதான் முதல்முறை. எங்களை மதிக்கிற உங்கள் எண்ணம்தான் என்ன?' என்று ஒரு பாட்டி கேட்டார். வீட்டுக்கொரு பிள்ளையை அனுப்புங்கள் வந்திருக்கிற ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பிள்ளையையாவது பள்ளியில் சேர்க்கணும். ஒழுங்காக வரும்படி பார்த்துக் கொள்ளணும். 'நடவு அறுவடை காலத்தில் பள்ளிக்கு விடுமுறை விடச் சொல்கிறேன். அப்போது வயல் வேலைக்கு இட்டுக் கொள்ளலாம். அதுவரை ஊர் சுற்றுவதற்குப் பதில், ஒழுங்காகப் பள்ளியில் வந்து படிக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும்' என்றேன். மூதாட்டிகள் தங்களுக்குள் ஆலோசனை செய்தார்கள். பிறகு அப்படியே ஆகட்டும் சாமி!' என்றார்கள். 'வாத்தியார் அய்யா கேட்டுக் கொள்ளுங்கள். காலையில் பள்ளி நேரத்துக்கு முன்பு, குடியிருப்புக்குள் போய் வாருங்கள். இப்பாட்டிகள் இங்கும் அங்கும் இருப்பார்கள். பிள்ளைகளை அனுப்பும்படி நினைவுபடுத்துங்கள். ஒரு திங்கள் இப்படிச் செய்த பின் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்று பார்ப்போம்' என்று ஆசிரியருக்கு ஆணையிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/685&oldid=787662" இலிருந்து மீள்விக்கப்பட்டது