பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 643 ஆசிரியர் நாள்தோறும் ஊருக்குள் சென்று, பெரியோர் துணையை நாடி, வருகையைக் கூட்ட இசைந்தார். வழக்கமான பார்வைக் குறிப்பை எழுதினேன். பொதுமக்கள் வாக்குறுதியைப் பற்றி எழுதினேன். வருவோர் எண்ணிக்கையை வளர்க்க ஒரு திங்கள் நீடிப்புத்தவணை கொடுக்கலாம் எனக் குறித்தேன். அதைக் கூடியிருந்தவர்களுக்குப் படித்துக் காட்டினேன். பிறகு, தஞ்சைக்குத் திரும்பினேன். உரிய அலுவலகக் கோப்பில், நடந்தவற்றை எழுதி, மேலும் ஒரு திங்கள் தவணை கொடுக்கும்படி பரிந்துரைத்துக் குறிப்பு எழுதினேன். 'கொடுக்க முடியாது' என்று பதில் வருவதற்குள் ஒரு திங்கள் ஆகிவிடுமென்பது என் மதிப்பீடு. == மறுப்பு ஆணையோடு, எனக்கு ஒரு குட்டுக் கொடுத்தால் என்ன செய்வது என்று சிந்தனை மின்னிற்று. ஏழைகளின் ஏற்றத்திற்காக, அந்த அடியைப் பொறுத்துக் கொள்வோம் என்று, துணிவை ஊட்டிக் கொண்டேன். முயற்சியில் வெற்றி பதில் வரக் காலதாமதம் ஏற்பட்டது. அதற்கு முன் கல்விராயன் பட்டியிலிருந்து விரிவான கடிதம் வந்தது. 'வருகை வளர்ந்துவிட்டது. அது அப்படியே இருந்தால் இரண்டாவது ஆசிரியர் தேவைப்படுவார். மேலுமொரு திங்கள் கவனித்துவிட்டு, பிறகு கோரிக்கையை அனுப்புவேன்; இது கடிதத்தின் சுருக்கம். -- மீண்டும் அப்பள்ளியைத் திடீரெனப் பார்வையிட்டேன். வருகை உயர்ந்து இருந்ததை நேரில் கண்டேன். பள்ளியை எடுக்கத் தேவையில்லை என்று மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தொடர் கடிதம் எழுதினேன். பள்ளியின் வருகை குறையவே இல்லை. மேலும் ஓரளவு கூடிற்று. இரண்டாவது ஆசிரியருக்குப் பரிந்து உரைத்தேன். சற்றுக் காலதாமதமானாலும் இரண்டாவது பதவி கொடுக்கப்பட்டது. மூடுவிழாவை நெருங்கிய ஒரு அரிஜன நலப் பள்ளியைக் காப்பாற்றிய மகிழச்சியில் குளித்தேன். அது இன்றும் இயங்குகிறது. மூன்று ஆசிரியர்கள் பள்ளியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/686&oldid=787664" இலிருந்து மீள்விக்கப்பட்டது