பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 நினைவு அலைகள் செய்யமுடியுமா? ஊர் வம்பு பேசாமல், பேசவேண்டியதைப் பேசக்கூடியவர்கள் தெரிந்தால் சொல்லும்' என்றேன். 'தங்கள் பேச்சுக்குக் குறுக்கே சொல்ல மாட்டேன்.' 'திரு. சுயம்பிரகாசம் என்று ஒரு வக்கீல் அய்யா இருக்கிறார். அவரும் இப்பக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்கிறவர். - 'அவர் முக்குலத்தோராயினும் ஆதிதிராவிடர்களைத் தாழ்ந்தவர் களாக நடத்துவதில்லை. மாவட்ட ஆட்சிக்குழு உறுப்பினராய் இருந்து எங்கள் முன்னேற்றதிற்கான திட்டங்களை ஆதரித்தவர்; நன்றாகப் பேசுவார். 'அய்யாவுக்குச் சரியென்று பட்டால் அவரை ஆண்டுவிழாவுக்கு அழைத்துப் பார்க்கிறேன்' என்றார். 'திரு. சுயம்பிரகாசத்தைப் பற்றி எனக்குக் கேள்வி உண்டு. நேரடித் தொடர்பு கிடையாது. உங்களைத் தாழ்ந்தவராகக் கருதாதவரை நீங்கள் நிறையப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவரைக் கூப்பிடுவக நல்லது. 'உங்களுக்கு அவரை நன்றாகத் தெரியுமா? நீங்களே அவரிடம் ஒப்புதல் பெற்றுவிடுவீர்களா?' என்று கருத்தும் கேள்வியுமாகக் கூறினேன். - 'வக்கில் அய்யாவுக்கு மிக வேண்டியவர்கள் எனக்குத் தெரியும். அவர்கள் வழியாக முயல்கிறேன்' என்றார் முத்துசவரி. "நல்லது. இன்னொரு பெரியவரைச் சொல்லும்' என்றேன். 'அய்யா கரந்தட்டாங்குடியில் இன்னொரு வக்கீல் அய்யா இருக்கிறார். அவர் அய்யா உமாமகேசுவரம்பிள்ளைக்கு உறவினர். அவரும் எங்கள் மக்களுக்கு உதவியானவர்' என்று முத்துசவரி, சொல்லிக்கொண்டு இருக்கையிலே, அவர் பேச்சில் குறுக்கிட்டேன். 'பல மாவட்ட ஆட்சிக்குழுக்களில் செயலாளர் பதவியில் இருந்துவரும் புகழ்பெற்ற வக்கீல் திரு. வேதாசலம் அவர்களையா குறிப்பிடுகிறீர்கள்? என்று கேள்வி தொடுத்தேன். "அவரேதான் எசமான், அவரை அய்யாவுக்குத் தெரியுமா? அவரை அழைக்கலாமா?' என்று ஆவலுடன் கேட்டார் ஆசிரியர் முத்துசவரி. 'அவரேதான். அவரைப் பற்றியும் கேள்வியே ஒழிய அவரோடு நேரடி நட்புக் கிடையாது. அவர் சமுதாயத்தின் கீழ்ப் படிகளில் உள்ளவர்கள்பால் பரிவு கொண்டவர் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவரையும் அழைத்துக்கொண்டு போகமுடிந்தால் பிரமாதமாக இருக்கும்' என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/689&oldid=787670" இலிருந்து மீள்விக்கப்பட்டது