பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தரவடிவேலு 27 சுதந்திர இந்தியாவில் ஆகாதவர்களைக் கொடுமைப்படுத்த தேசத்துரோகம் என்னும் மயக்குச்சொல் பயன்படுவதுபோல், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் 'இராஜத் துரோகம் என்று குற்றம் சாட்டிவிட்டு, எவ்வளவு சித்திரவதைக்கு ஆளாக்கினாலும் அதைத் தட்டிக் கேட்க அப்போது நாதியில்லை. எனவே, அன்றைய அரசின் பகைக்கு அஞ்சி, கோகலேயின் மசோதாவைத் தள்ளிவிட்டது இந்தியச் சட்டமன்றம். அதனால் ஏற்பட்ட விளைவு? இலட்சக்கணக்கான சிற்றுார்களில் இக்காலத் தொடக்கப் பள்ளிகளும் இல்லை. இருள் சூழ்ந்த இலட்சக்கணக்கான ஊர்களில் ஒன்றாக இருந்தது நெய்யாடிவாக்கமும். முற்காலத்தில் கல்விச் சுனைகளைப் பெற்று விளங்கிய காஞ்சிபுர வட்டத்தையும் கல்லாமை கெளவிக் கொண்டிருந்தது. கல்விச் சாலைகள் இல்லாமையைவிடக் கொடுமை, கல்வியின் தேவையைச் சிறிதும் உணராதுமக்கள் மறந்திருந்த மாக்கள் நிலை. எங்கள் குடும்பம் எங்கள் செய்யாற்றின் வடகரையில், இரண்டு கல் தொலைவில், காவாந்தண்டலத்தில் சிறிய தொடக்கப் பள்ளி ஒன்று இருந்தது. அதன் தொலைவு படிப்புக்குத் தடையாக இருந்தது. ஆண்டிற்கு எண்பது நாள். சிறுவர்கள் கடக்க முடியாத அளவு வெள்ளம் குறுக்கிடும். எனவே, எங்களூரார் திண்ணைப் பள்ளிக் கூடத்தையே நம்ப வேண்டியிருந்தது. என் முன்னோர்களில் ஆண்கள் மட்டும், திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு பெற்றிருந்தார்கள். பிறகு தன் முயற்சியால் படிப்பையும் அறிவையும் வளர்த்துக் கொண்டார்கள். எனக்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த பெண்கள் யாரும் எழுத்தறிவும் பெற்றதில்ல்ை. மூத்த உறவினர்கள் அனைவரும் வேளாண்மையில் ஈடுபட்டிருந் தார்கள். சிறிய பாட்டனார் இராமசாமி ஒருவர் மட்டும் ஊரைவிட்டு வந்து, சென்னை - கல்கத்தா இரயில் பாதை அமைத்தபோது, 'கண்ட்ராக்டராக நெல்லூரில் தொழில்புரிந்தார். நான் பிறந்தபோது அவரும் தொழிலை முடித்துக்கொண்டு நெய்யாடிவாக்கத்தில்தான் குடியிருந்தார். என் நேர் பாட்டனார் பெயர் சண்முகம்; பாட்டியின் பெயர் நாகம்மாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/69&oldid=787671" இலிருந்து மீள்விக்கப்பட்டது