பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 நினைவு அலைகள் அன்று வேங்கைகளாக விளங்கிய சுயம்பிரகாசம், வேதாசலம், மற்றோர் அப்பக்கப் பெரியவர் ஆகியவர்களோடு நாங்கள் சென்று, தங்கி, பேசி விட்டு வந்ததால், குடியிருப்புக் குடிசைகள் தீக்கிரை யாகாமல் தப்பின. அம்மக்களும் அடி உதைக்கு ஆளாகவில்லை. நாங்கள் அனைவருமே, அவர்களுக்கு நெருக்கமானவர்கள் போல் நடந்தது, புனவாசல் குடியிருப்பு மக்களின் பரிவை எங்கள்பால் திருப்பிற்று. - ■ 'பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம் என்று முழங்கச் சொன்னபோது, ஆர்வத்தோடு முழங்கினார்கள். பலன் உண்டா? 98. இல்லாத பள்ளி 'பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவோம். இப்படி மேல் புனவாசல் குடியிருப்பில் வாழ்ந்தோர் முழங்கினார்களே; அதன்படி நடந்தார்களா? ஆம்: நடந்தார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாளே செயல்படத் தொடங்கினார்கள். பள்ளிக்குப் பிள்ளைகளின் வருகை கூடிற்று. ஏழு நாள்களுக்குள் இரு ஆசிரியர் களுக்குப் போதுமான அளவிற்கு வருகை உயர்ந்துவிட்டது. ஒரு திங்களில் மூன்றாவது ஆசிரியர் தேவைப்படும் அளவு பள்ளியில் மாணவர்கள் வருகை பெருகிவிட்டது. மூன்றாவது ஆசிரியர் போட முடிந்ததா? முடிந்தது. சில திங்களுக்குள், உரிய அலுவலகத்திற்கு எழுதி, மூன்றாவது ஆசிரியர் பதவிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஈராசிரியர் பள்ளியை ஒராசிரியர் பள்ளியாக மாற்றியிருந்தால், சில திங்களில் இல்லாவிடினும், சில ஆண்டுகளிலாவது, அதுவும் எடுபட்டிருக்கும். மாறாக ஆள் குறைப்பைத் தடுத்து நிறுத்தி மூன்றாவது ஆசிரியரையும் பெற்றுத் தந்தது. அந்தப் பள்ளியின் தொடர்வளர்ச்சிக்கு உதவிற்று. பிற்காலத்தில், ஏழைப்பங்காளர் காமராசர், கல்விமடை திறந்து விட்டபோது மேல்.புனவாசல் நலப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்து விட்டது. வாழ்க்கையில், துன்பம் சூழ்கையில் தற்கொலை செய்து கொள்வதைப் போன்ற பெரும் தீங்கு, அமைப்புகளை - சிறப்பாக, கல்வி அமைப்புகளை - மூடுவது என்ற பாடத்தை அப்போது கற்றுக்கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/691&oldid=787673" இலிருந்து மீள்விக்கப்பட்டது