பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ து. சுந்தரவடிவேலு 649 உயிரோடிருந்தால், கல்வி நிலையங்கள் என்றோ ஒரு நாள் வளம்பெறும்; பயன்படவேண்டிய வகையில் பயன்படும் என்ற படிப்பினையை என் பணியின் தொடக்க காலத்திலேயே கற்றுக் கொண்டதால் நான் பெரும் பதவிகளில் இருந்தபோது கல்விக் கூடங்களை மூடாமல் வளர்ப்பதிலேயே ஈடுபட முடிந்தது. மரபைக் கெடுத்தேன் தஞ்சையில் இளந்துணை ஆய்வாளனாக இருந்த காலை நான் சில 'விபரீதமான செயல்களைச் செய்தேன்! சோழ வளநாடு சோறுடைத்து. இது வெறும் பேச்சு வழக்கல்ல. உண்மையான வழக்குங்கூட. அதோடு, தஞ்சை மாவட்டத்தில் அய்யரோ, அய்யங்காரோ குடியிராத சிற்றுார்களைக் காண்பதும் அரிது. எனவே, மற்றவர்கள் வீடுகளில் சாப்பிடாத முறையைப் பின்பற்றுபவர்கள்கூட எந்த ஊரிலும் பட்டினியாகத் திரும்ப நேரிடாது. பள்ளி ஆய்வாளர் வந்தால் ஆசிரியர் வேறு சாதியைச் சார்ந்தவராயினும் எந்த அய்யர் வீட்டுக்காவது வேண்டுகோள் விடுப்பார். உணவு வேளையாக இருந்தால் உணவும், பிற வேளையாக இருந்தால், சிற்றுண்டியும் காப்பியும் வந்து சேரும். அப்படி ஊருக்கு ஊர் உணவு கிடைத்த அங்கும் வாழத் தெரியாதவன் நான். தஞ்சையைவிட்டுப் புறப்படும்போதே, வேண்டிய சிற்றுண்டிப் பொட்டலத்தோடும் சூடுகுடுவை நிறையக் காப்பியோடும் புறப்படுவேன். கைiசிக் கொண்டு நடப்பதற்குப் பதில் இவற்றைச் சுமந்து செல்ல வேண்டியதைப் பற்றி, என் ஊழியர் அரங்கராசு கவலைப்பட்டதில்லை. "எங்கள் மாவட்டத்தின் மரபையே கெடுத்துவிடுகிறார் என்று வேதனையோடு பலரிடம் முணுமுணுத்ததாகப் பிறகு ஒரு சமயம் கேள்விப்பட்டேன். ஆய்வாளர் ஒசி ச்சாப்பாடு உண்டால் ஊழியருக்கும் அப்படியே இடைக்கும். என்னால், அவருக்குக் கிடைத்து வந்தது நின்றுவிட்டது. நம் சமுதாய முறையும் அலுவலக முறையும் இப்படித் தவறான அடிப்படையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. நேர்மையாளர் பதவிக்கு வந்தால் அவருடன் ஊழியம் செய்பவர்கள் வெறுக்கிறார்கள்; புகார் சொல்லுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/692&oldid=787674" இலிருந்து மீள்விக்கப்பட்டது