பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 நினைவு அலைகள் ஆனால் என்னுடைய ஊழியர் அரங்கராசு மொட்டைக் கடிதர்சி எழுதும் வழக்கம் இல்லாதவர். எனவே அவரால் எனக்குத் தொல்லை வரவில்லை. ஆசிரியர்களின் அவலம் அந்தக் காலத்தில், மான்யம் பெறும் தொடக்கப்பள்ளிகளை நடத்துவது ஆதாயமான தொழில். நிர்வாகத்திறனும் தொழில்நுட்பமும் குழைவும் இருந்தால், ஒருவரே அய்ந்தாறு பள்ளிகளை நடத்துவார். அய்ம்பது அறுபது ஆசிரியர்களை வேலைக்கு வைத்து வேலை வாங்குவாா. அன்று ஆசிரியர்களுக்கு என்ன ஊதியம்? மான்யப் பள்ளிகளில் தொடக்கநிலை ஆசிரியருக்கு ஆண்டுக்கு நூற்று நாற்பத்து நான்கு ரூபாய்களே. இடைநிலை ஆசிரியருக்கோ, இருநூறு ரூபாய்கள்ஆண்டு ஊதியம். மேற்கூறிய சொற்பத் தொகைகளும் ஆண்டுக்கொரு முறையே கொடுக்கப்படும். அதில் வெட்டு இல்லாது பெற, ஆய்வாளர் தயவு வேண்டும். ஆசிரியர் நியமனத்தில் முன் பணம் - கையூட்டு வாங்குவோர் இருந்தனர். ஆண்டு ஊதியம் வரும்போது, அதில் கழிவு பிடித்துக் கொள்ளும் நிர்வாகிகள் செயற்பட்டார்கள். நல்ல நிர்வாகம் கிடைக்கும் வரை, பயிற்சி பெற்ற ஆசிரிய ஆசிரியைகள் காத்துக் கொண்டிருக்க முடியுமா? முடியாது. வீட்டில் சாப்பாட்டிற்கு இருந்தாலும் காத்திருக்க முடியாது. ஏன்? பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி முடிந்த மூன்றாண்டுக்குள், குறைந்த அளவு பதினெட்டுத் திங்கள் பணி செய்து முடிக்க வேண்டும். முடிக்கத் தவறினால், பயிற்சிக்கான செலவு என்று பெருந்தொகையை அக்காலத்திற்குப் பெருந்தொகையை அரசிற்குத் திரும்பக் கட்டிவிட வேண்டும். அப்படிக் கட்ட வேண்டிய காலம் நெருங்கியதும் கெடுபிடிகள் செய்து சொத்தை, ஏலம் போட்டுப் பணத்தைத் தண்டிவிடுவார்கள். அந்தக் காலத்தில் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு - இப்போது சில ஆண்டுகளாக இருப்பதைப் போல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/693&oldid=787676" இலிருந்து மீள்விக்கப்பட்டது