பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 651 ஆகவே எப்படியாவது ஒரு மான்யப் பள்ளி நிர்வாகியைப் பிடித்து, எதையாவது கொடுத்து இடம் பிடிக்க வேண்டிய கொக்காக்க ஆளானார்கள். நிர்வாகிகள் வருகையை இப்படியும் அப்படியும் சரிசெய்து, ஆய்வாளர்களைச்சரிக்கட்டி, கூடுதல் ஆசிரியர்களைப் போட ஒப்புதல் பெறுவார்கள். வேலைக்குச் சேர்ந்தவிட்டால் போதாது. ஆசிரியப் பயிற்சிச் சான்று இதழில் ஆசிரியர் பணி இன்ன தேதியிலிருந்து இன்ன தேதி வரை, சரியாக இருந்தது என்று ஆய்வாளர் எழுதி, தேதியும் அலுவலக (மத்திாையம் பொாக்கிக் கையொக்க .ெ வேண்டும். பணியை மதிப்பிட, பள்ளிக்கு நேரில் வந்து போக வேண்டும். அப்படி வராமற் போனால், பணிக்கான சான்று போய்விடும். அசிரியர் தவியாகத் தவிப்பார். தொல்லை கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தார்களோ என்று தோன்றுகிறதா? ஆம்; அப்படியே! இம்முறை பிற்காலத்தில் ஒழிக்கப்பட்டது. இக்கொடுமையை ஒழித்ததில் எனக்கும் பங்கு உண்டு. இயங்காத பள்ளி தஞ்சை வட்டத்தில் ஒரு நிர்வாகி என்னுடைய தணிக்கைக்கு உட்பட்டு இரு மான்யப் பள்ளிகளை நடத்தி வந்தார். அதே வட்டத்தில் வேறு ஆய்வாளர்களின் மேற்பார்வையில் இரண்டு மூன்று பள்ளிகளை நடத்தி வந்தார். அவர் கைகாரப் பேர்வழி' என்று பலரும் என்னை எச்சரித்தார்கள். அவர் நடத்திய பள்ளிகளில் ஒன்று, ஒரு குக்கிராமத்தில் ஆதிதிராவிடக் குடியிருப்பில் இருந்தது. நம் சமுதாய முறைப்படி உச்சியில் இருப்பதாகக் கருதப்பட்ட ஒருவர், கடைசிப் படிக்கட்டில் இருப்பவர்கள் நடுவே பள்ளியை நடத்தினார். சமத்துவ உணர்வின் உந்தலா? இல்லை. பணத்தாசை யாரையும் எங்கும் கொண்டு போகும் என்பகற்க இக ஒர் எடுத்துக்காட்டாகும். அப்பள்ளிக்கு வடக்கிலும தெற்கிலும் காவிரியிலிருந்து வரும் ஆழமான வாய்க்கால்கள் உண்டு. பழக்கமில்லாதவர்கள் அவற்றை எளிதில் கடக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/694&oldid=787678" இலிருந்து மீள்விக்கப்பட்டது