பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு {553 'திடீர்ப் பார்வை என்பது அங்கே செல்லாது' என்று விளக்கம் சொன்னார். எழுந்த வெகுளியை அடக்கிக் கொண்டேன். 'பரவாயில்லை; வழிகாட்டிக் கொண்டு முன்னே போகவும் ' என்று உறுதியாக ஆணையிட்டேன். வரப்புச் சேறுகளைச் சமாளித்து நடந்தோம். ஒரு மணிக்குமேல் நடந்தபின், வாய்க்கால் கரையை அடைந்தோம். உடனே ஊழியர் அரங்கராசு, 'எசமான் பள்ளிக்கூடம் வீழ்ந்து கிடக்கிறது. அங்கே எவரும் இல்லை. குரல் கொடுத்துப் பார்க்கிறேன். ஊரார் எவராவது வரட்டும்; அப்புறம் வாய்க்காலில் இறங்கிச் செல்வோம்' என்று என்னை எச்சரித்தார். நான் கேட்கவில்லை. இடுப்பளவுக்கு மேல் நீர் இல்லை என்று, என் கண் அளவை சொல்லிற்று. அந்தத் துணிச்சலில் வாய்க்காலில் இறங்கினேன். ஊழியரும் இறங்கிவிட்டார். இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுகப் பிடித்த படி காலை அழுத்தி வைத்து நடந்தோம். அப்பாடி எதிர்க்கரை சேர்ந்தோம்! பள்ளியண்டை சென்றோம். எங்களைக் கண்டதும் ஆங்காங்கே உட்கார்ந்திருந்த ஏழெட்டுப் பெரியவர்கள் கூடிவிட்டார்கள். நான் யார் என்பதை அரங்கராக தெரிவித்தார். பெரிய கும் பிடு கிடைத்தது. பள்ளியைப் பற்றிக் கேட்டேன். 'இதைத் தொடங்கும்போது அய்யர் சொல்லியனுப்பினார். எங்க ஆசிரியர் ஒருவர் வந்து, எங்களோடு பேசினார். எங்களால் முடிந்த வரைக்கும் மண்சுவர் எழுப்பி, ஒலைக்கூரை போட்டு, பள்ளியைக் கட்டிக்கொடுத்தோம். மூன்றாண்டு நடந்தது; சில பையன்கள் எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டனர். 'ஆனால் சென்ற காற்று மழையில் கட்டடம் வீழ்ந்து தரைமட்ட மாகிவிட்டது. எங்கள் குடிசைகள்கூடத் தண்ணிரில் போய் விட்டன. அதனால் எங்களால் பள்ளிக்கூடத்தைப் புதிதாகக் கட்டிக் கொடுக்க முடியவில்லை. 'பத்து மாதமாகப் பள்ளி நடப்பது இல்லை. ஆசிரியர் அவங்க ஊரில் நின்றுவிட்டார். அய்யர், அவ்வளவாவது செய்தார். அதற்கு மேல் எங்களுக்குக் கொடுப்பினை இல்லை எசமான். இது கலந்துரை யாடலின் சுருக்கம். அவர்கள் சொன்னதை எழுதினேன். அவர்களுக்குப் படித்துக் காட்டினேன்; கையெழுத்திடச் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/696&oldid=787682" இலிருந்து மீள்விக்கப்பட்டது