பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/697

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

է):յագ நினைவு அலைகள் இருவர் கையெழுக்கிட்டார்கள். எாடு டு ' .ே ர் - ள் - . ஒத்தினார்கள். இதற்குள் இளநீர்கள் நான்கு கொண்டு வந்து விட்டார்கள்: அன்புடன் வெட்டிக் கொடுத்தார்கள்; குடித்தோம். ஊர்திரும்பினோம். பள்ளி நடைபெறுவதாகப் பதிவு தஞ்சைக்குப் பிற்பகலே வந்து சேர்ந்தோம். அப்பள்ளி பற்றித் திங்கள்தோறும் வரும் கணக்குக் கோப்பைப் பரிசீலனை செய்க பார்த்தேன். கடந்த பத்துத் திங்களும் அப்பள்ளி நடந்ததுபோல, வருகைக் கணக்கு, ஆசிரியர் விவரம் முதலியன உரிய காளில் வங்து கோக்கப்பட்டிருந்தன. அந்தப் பத்துத் திங்களில ஒருமுறை திடீர்ப் பார்வையும் நடந்ததாக எழுத்து வழி தகவல் இருந்தது. எது உண்மை ஊரார் சொன்னதா? பள்ளியின் திங்கள் கணக்குச் சொல்வதா? ஏழை சொல் அம்பலம் ஏறுமா? முன்னிருந்த ஆய்வாளர் பார்க்காமலே, பார்வையிட்டதாகக் குறிப்பு எழுதியிருப்பாரா? எழுதியிருந்தாலும் அதை என்னால் மெய்ப்பிக்க முடியுமா? மெய்ப்பிக்க இயலாவிட்டால், அக என்னைக் கடுமைாகக் தாக்கும். இப்படிக குழமபினேன். எங்கே சென்றாலும் இப்படி வம்ப வங்க நிற்கிறதே என்று ஏங்கினேன். மூன்று நாள்கள் படாத பாடுபட்டேன். ஆய்வாளர் ஊரில் இல்லை. அலுவலர்கள் அப்பக்கத்துக்காரர்கள். அவர்களே நிர்வாகிக்கு உடந்தையாக இருந்தால்? இப்படி அய்யப்பட்டு எவர் இடமும் எதைப் பற்றியும் பேசாமல் தவித்துக் கொண்டு இருந்தேன். மானியம் வேண்டாம் திடீரென, ஒருநாள் காலை நிக்கல்சன் மாடித் தாழ்வாரத்தில் ஒருவரைக் கண்டேன். அவர் எனக்குப் பெரிய கும்பிடு போட்டு விட்டு, ஒரு நீளத் தாளை நீட்டினார். அதை வாங்கிப் படித்தேன். என் கண்களை நம்பமுடியவில்லை. இருமுறை படித்தேன். அப்புறம் வந்தவரைப் பார்த்தேன். “தாங்கள் என் பள்ளியைத் திடீரெனப் பார்வையிட்டதாகத் தகவல் வந்தது. பெரியவர்கள் இடம் சாமர்த்தியமாகப் பேசுவதைவிட உண்மையாகப் பேசுதல் நல்லது என்று எண்ணினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/697&oldid=787684" இலிருந்து மீள்விக்கப்பட்டது