பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ե5 Յ நினைவு அலைகள் இவர் அரசியல் காட்டாற்றில் நீந்த முயன்றார். அரசியலுக்கு வேண்டிய 'சூது இல்லாமையால், யார் யாரோ பெரியவர்களாகும் தலைமுறையில், எங்கோ ஒதுங்கிவிட்டார். ஒரு முறை இலப்பைக் குடிக்காட்டில் ஜமாலியின் வீட்டு மாடியில் தங்கி, விருந்து உண்டதை நினைந்து நிறைவு கொள்ளுகிறேன். இப்போது, ஸ்ரேயஸ் மாணவர் விடுதிக்குச் செல்வோம். அறவுணர்வு, மாந்தரின் உயிர் மூச்சாக இருக்க வேண்டிய ஒன்றாகும். அந்த உணர்வு அற்றுப் போகும்போது, மக்கள் மாந்தர் நிலையை இழக்கிறார்கள்; மரத்தின் நிலைக்கு மாறுகிறார்கள். மாந்தர் இனம் உள்ளவரை இருக்கவேண்டிய அறவுணர்ச்சி, எல்லாக் காலத்திற்கும் ஒரே உருவைக் கொள்ளுதல் ஆகாது. காலத்தின் தேவைக்கேற்ப, புதுப் புதுக் கோலம் பூணுவது முறை. எவ்வகை வண்டியும் இன்றி, ஏராளமானோர் நடந்தே வெளியூர் செல்லும் நிலையில் இருந்த முற்காலத்தில், சுமைதாங்கிகள் தேவைப்பட்டன. இன்று அத்தேவை மிக மிகக் குறைந்து விட்டது. எனவே, அறவுணர்ச்சி, ஆங்காங்கே பேருந்து நிற்குமிடங்களில் பயணிகளுக்குக் குடைகளாக எழும்புகின்றன. இந்த அடிப்படை உண்மையை உணர்ந்த, தேசியகவி பாரதியார், 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல்.... அன்னயாவினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்' என்று, அற உணர்வினை மடைமாற்றஞ் செய்யச் சொன்னார். சோறு போட்டுக் காத்தல் குறை உடையதல்ல. ஆனால் தொழில் புரிய உதவுவது நிறைவானது. இதை உணர்ந்து தமிழ் மக்கள், ஒரு பத்து ஆண்டுகாலம், கல்வி வளர்க்கும் அறத்தின் பால் முனைப்பாயி ருந்தார்கள். அந்த நாளும் வந்திடாதோ? ஸ்ரேயஸ் மாணவர் விடுதி ஆண்டு விழாவில் கலந்து கொண்டேன். விடுதி மாணவர்கள் என்னுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அடேயப்பா அவர்களிடையே பொங்கிய பூரிப்புக்கு எல்லையில்லை. நம்பி மோசம் போனேன் துணிந்து, வளர்ச்சிக்கான ஆக்கப்பணி செய்கிறேனென்ற மகிழ்ச்சியில் இருந்தேன். அதைக் கெடுக்கும் நாட்டுக்குண்டு ஒன்று வந்து வீழ்ந்தது. அது என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/701&oldid=787697" இலிருந்து மீள்விக்கப்பட்டது