பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 659 பொன்னேரி ஆய்வாளர் அலுவலகத்தில், பள்ளித் தணித்கை அறிக்கைகளின் மூலங்களை விட்டு வந்தேனல்லவா? சில மணித் தவணையில் பதவியை வேறொருவரிடம் ஒபபடைகை வேண்டியிருந்ததால், அவற்றின் படிகளை நானே எடுத்துக் கொடுக்க இயலவில்லை என்பது நினைவிற்கு வருகிறதா? அவற்றின் படிகளை எடுத்து, உரிய காலத்தில், மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவிடுவதாக, அமிர்தலிங்கதேசிகரும் ஆய்வாளர் அலுவலக உதவியாளரும் சொன்னதை நம்பி வந்து விட்டேன் அல்லவா? அவர்கள் என்னிடம் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை. அத்தனை அறிக்கைகளையும் அப்படியே கட்டி வைத்திருந்தார்கள். மாவட்ட அலுவலகத்தில் இருந்து, அறிக்கைகளை அனுப்பும்படி நினைவுக் கடிதம் வந்ததாம். உடனே செயல்பட்டார்கள். எப்படி? அறிக்கைகளின் மூலங்களைச் சேர்த்துக்கட்டி, மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டார்கள். மூல அறிக்கைகளை எழுதிய நெ.து. சு படிகளை எடுத்துக் கொடுக்காமல் போய்விட்டதால், மூலங்களை மட்டும் அனுப்பி வைப்பதாக, மேலதிகாரிக்கு எழுதி அனுப்பினார்கள். மாலை ஆறு மணிக்கு நெடுஞ்சாலையில் காத்துக் கொண்டிருந்த என்னிடம் மாறுதல் ஆணையைக் கொடுத்துப் புதிய ஆய்வாளரைப் பதவியில் சேரவைத்தது, உலகறிந்த செய்தி. எனினும், மாவட்டக் கல்வி அலுவலகம் என்பேரில் குறை கண்டது. அத்தனை அறிக்கைகளையும் தஞ்சை மாவட்டக் கல்வி அலுவல ருக்கு அனுப்பியது. அவற்றின் படிகளை எடுத்து அனுப்பும் படி நெ.து. சு.வுக்கு ஆணையிடுவதோடு, அவர் முன்னரே அப்படிச் செய்யத் தவறியதற்கு, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு, வாங்கி, அனுப்பவும்' என்று தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலருக்கு ஒரு கடிதம் வந்தது. கணவனே விரட்டும்போது அண்டை வீட்டுக்காரர்களுக்கு இளக்காரந்தானே. உண்மையான நெருக்கடியை அறிந்த செங்கற்பட்டு மாவட்டக் கல்வி அலுவலகம் விரட்டியதோடு, தஞ்சை மாவட்ட அலுவலகமும் சேர்ந்து கொண்டது. அங்கிருந்து எனக்குக் கடுமையான கடிதம் வந்தது. அதுவும் நன்மைக்கே. பிற்காலத்தில் பலரால், முதுகில் குத்தப் படுவதையும் உண்மைக்குப் புறம்பான கடுஞ்சொற்களால் தாக்கப் படுவதையும் சமாளித்துக் கொள்ளப் பயிற்சியாக அது அமைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/702&oldid=787698" இலிருந்து மீள்விக்கப்பட்டது