பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 நினைவு அலைகள் இருந்ததை அறியாது, அன்று அல்லல்பட்டேன். தாக்கம் வராது கண்விழித்துக் கிடந்தேன். இவ்வளவு சிறிய காரியத்தில் அமிர்தலிங்கம் முதுகில் குத்தி விட்டாரே என்று கொந்தளித்தேன். தஞ்சை அலுவலகத்தில் அதை வைத்து என்னைக் கேலியாகப் பேசுவதை நினைத்துப் புழுங்கினேன். வைராக்கியம் பிறந்தது. இரவோடு இரவாக அத்தனை அறிக்கைகளையும் படி எடுத்து முடித்தேன். 'பொன்னேரி பதவியை மாற்றிக் கொடுக்க எனக்கு முன் அறிவிப்பு இல்லை. அந்நெருக்கடியோடு, சேர்க்கைக் காலம் எடுத்துக் கொள் ளாமல், உடனே தஞ்சைக்குச் செல்லும்படி அவசர ஆணை வந்தது. 'குறிப்பிட்ட நாளன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கிய வேலை இரவு எட்டு மணிக்கே முடிந்தது. 'இதற்கிடையில், நடந்ததோ பத்துக்கல்; கலந்து கொண்டதோ இரு ஆசிரியர் மையக் கூட்டங்கள்; ஒவ்வொன்றிலும் ஒரு மணிநேர உரையாற்றல். இவற்றிற்கும் மேலாக, புதிதாக வந்த ஆய்வாளர் மட்டுமன்றி, நிலையாக உள்ள உதவியாளரும், படிகள் எடுத்து அனுப்புவதாக வாக்குறுதி தந்தார்கள். அதை நம்பி மோசம் போனேன். ஆகவே, நான் கவனக் குறைவாகவோ, பொறுப்பைக் கழிக்கும் வகையிலோ நடந்து கொள்ளவில்லை. 'ஒரு திங்களில், சராசரி நடக்க வேண்டிய தணிக்கைகளைவிட, அதிகமான தணிக்கைகளை 1940 நவம்பர், டிசம்பர் திங்களில் நான் நடத்தியுள்ளேன். அது என் பொறுப்புணர்ச்சியைக் காட்டும் நான் ஏதும் தவறு செய்யவில்லை என்று விளக்கம் எழுதி அனுப்பினேன். என் விளக்கத்தை செங்கற்பட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா? 'நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' என்பதே அரசு அலுவலின் மூச்சு. இளநில எழுத்தர் எழுதும் நஞ்சைத் தொட எல்லோருமே அஞ்சுவர். வெள்ளைக்காரன் ஆண்டபோது மாகாண அரசை இளநிலை எழுத்தரும், இந்திய அரசை மேனிலை எழுத்தருமே நடத்தினார்கள், ! என்று கிண்டல் செய்வதுண்டு. அதில் உண்மையும் இருந்தது. பெரிய அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்று கேட்கத் தோன்றுகிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/703&oldid=787699" இலிருந்து மீள்விக்கப்பட்டது