பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/707

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᏮᏮᏮ நினைவு அலைகள் முதல் எட்டாம் வகுப்பு முடிய - அதுவரையில் மட்டுமே கட்டாய இந்திப் பாடத்தைச் செயல்படுத்தியது பற்றி. தந்தை பெரியாரின் சமுதாயச் சீர்திருத்தப்பணி, சாதிக் கலைப்பின் இன்றியமையாமை. அதிலுள்ள இடர்ப்பாடுகள், இப்படிப்பட்டவை குறித்து ஊர் பேர் தெரியாத நாங்கள் உரையாடுவோம்; ஊக்கம் பெறுவோம். சின்னவர்களும் சிந்திக்க முன் வந்த பொற்காலம் அது. அக்காலச் சிந்தனையாளர்களில் பதர்கள் குறைவு: மணிகள் நிறைய. இந்தியாவில், பிற்காலத்தவர் நம்ப மறுக்கும் அறவோர், காந்தியடிகள் பிறந்தார்: மண்ணாங்கட்டிகளாக இருந்த இந்தியர்களை மனிதர்களாக்க, உரிமையுடைய மனிதர்களாக்க முயன்றார்; ஓரளவு வெற்றியும் பெற்றார். பெற்ற வெற்றி ஒரளவே என்பது காந்திக்குக் குறையல்ல; நம் குறை. அதேபோல், தந்தை பெரியாருக்கு இணையான, சீரிய சிந்தனையாளரை, தன்னேரில்லாத சூறாவளியை, தொண்ணுாற்று அய்ந்தாம் அகவையிலும் ஊர் ஊராகச் சென்று முழங்கிய அரிமாவை, தொண்டில் பழுத்த பழத்தை உலகம் எளிதில் காண்பதில்லை. இருவருடைய தொண்டும் அருமையானவை, தேவையானவை. எனினும் நம்மியல்பில் உள்ள, களர்த் தன்மை, முழுப் பயனுக்குக் கேடாக நின்றது எனலாம். முழு ரூபாய் பலன் பெறவேண்டியவர்கள் இருபது முப்பது காசு பலன் பெற்றது போல்தான். ஒயாது சுற்றுப்பயணம் செய்து வந்த பெரியார் ஈ.வெ.ராமசாமி, தஞ்சையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வரப்போவதாக அறிவிக்கப்பட்டது. அது எங்களுக்குச் சிறிய பொறுப்பினைக் கொடுத்தது. அது என்ன? 101. என் கருத்தைப் பெரியார் ஏற்றார் குருசாமி இல்லமே பெரியார் தங்குமிடம் தந்தை பெரியார், சென்னை எழும்பூர், ஈ.வெ.கி. சம்பத் சாலையிலுள்ள பெரியார் திடலில் தங்குவாரென்பது பலருக்குத் தெரியும். பெரியார் அத்திடலை வாங்குவதற்கு முன்பு எங்கே தங்குவார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/707&oldid=787704" இலிருந்து மீள்விக்கப்பட்டது