பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 667 சென்னை, மீரான் சாயபு தெருவில் அவர் வாங்கி இருந்த மாடிவிட்டில். அதற்கு முன்பு? குத்துசி குருசாமியார் வீட்டில். திருவல்லிக்கேணியில் வாழ்ந்த குத்துாசியாருடன், அவரது மாமனார், மாமியார் மைத்துணிகள், மைத்துனர் எல்லோரும் குடியிருந்தார்கள். பின்னர் நானும் அக்குடும்பத்தில் ஒருவனாக வாழ்ந்தேன். தந்தை பெரியார், குத்துசி குருசாமியார் வீட்டில் தங்கும்போது பெரும்பாலும் அங்கேயே உணவு அருந்து வார். அவர் உடன் வருவோரும் அங்கேயே உணவு அருந்துவார்கள். o என் மாமியார் தங்கம்மாள், சமையலில் திறமையானவர். மரக்கறி உணவு, மாமிச உணவு இரண்டையுமே மிக நன்றாகச் சமைப்பார். அந்த அம்மாள் சமைக்கும் புலால் உணவு பெரியாருக்கு மிகவும் பிடிக்கும். எந்த அளவிற்குத் தெரியுமா? நானும் என் மனைவி காந்தம்மாளும் 1972 இல் ஒருமுறை, சென்னையில் தங்கியிருந்த பெரியாரைப் பார்ப்பதற்குச் சென்றோம். அப்போது எங்களிடம் சமையல் வேலை பார்த்த சிறுவன் சேதுராசனும் எங்களுடன் வந்தான். அவன் அறைக்குள் நுழைந்து, பெரியாரை வணங்கினான். அவனைப் பெரியாருக்கு அறிமுகப்படுத்தினேன். பளிச்சென்று, பெரியாருக்குப் பழைய நினைவுகள் வந்து விட்டன. என் மனைவியைப் பார்த்து, 'உங்க அம்மாள் வைக்கும் ஆட்டுக்கறிக் குழம்புபோல் சுவை யானதைச் சாப்பிட்டு எவ்வளவோ காலம் ஆகிவிட்டது' என்று ஆவலுடன் சொன்னார். அடுத்தநாள், என் மனைவி, தேர்ச்சி பெற்ற சமையல்காரர் ஒருவரை அழைத்து, மாமிச உணவைச் சமைக்கச் செய்து, அதில் பெரியாருக்குப் பிடித்தமான உணவை அனுப்பி வைத்தார். அதற்கு முன் நாள் நாங்கள் பெரியாரிடம் விடைபெற்றுக் கொள்கையில், வெளியே நின்ற சேதுராமனைக் கூப்பிட்டார். அந்தச் சிறுவனுக்கு ஒரு கைத்தறி ஆடையைப் போர்த்தி, 'அய்யா அம்மாவை, நன்றாகப் பார்த்துக்கொள்' என்று, நெஞ்சம் நெகிழச் சொல்லி அனுப்பினார். தஞ்சையில் பெரியார் 1941இல் முற்பாதியில், பெரியார் தஞ்சை பொதுக்கூட்டத்திற்கு வரத் திட்டமிட்டபோது, என் மாமியார் எங்களோடு தங்கியிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/708&oldid=787705" இலிருந்து மீள்விக்கப்பட்டது